ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாடு, நேற்று காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. அதில், இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்பட 8 உறுப்பினர் நாடுகளின் தலைவர்கள் காணொலிகாட்சி மூலம் பங்கேற்றனர்.
ரஷிய அதிபர் புதின் தலைமை தாங்கினார். இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். லடாக்கில் அத்துமீறும் சீனாவையும், எல்லைதாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபடும் பாகிஸ்தானையும் கண்டிக்கும் வகையில், காணொலி காட்சியில் அந்த தலைவர்கள் முன்னிலையில் பிரதமர் மோடி பேசினார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளிடையே தகவல்தொடர்பை அதிகரிக்க வேண்டும் என்று இந்தியா கருதுகிறது. அதற்கு நாம் முயற்சிக்கும் போது, ஒவ்வொரு நாடும் பிற நாடுகளின் இறையாண்மையையும், பிராந்திய ஒருமைப் பாட்டையும் மதிக்க வேண்டும். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அடிப்படை கோட்பாடுகளுக்கு உட்பட்டு செயல்படுவதில் இந்தியா உறுதியாக உள்ளது.
ஆனால், சில உறுப்பினர் நாடுகள் (பாகிஸ்தான்), தேவையின்றி இருதரப்பு பிரச்சினைகளை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கு கொண்டு வர மீண்டும், மீண்டும் முயற்சிக்கின்றன. இது, இந்த அமைப்பின் அடிப்படை கொள்கைகளுக்கு முரணானது.
கொரோனாவுக்கு எதிரானபோரில், தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதிலும், வினியோகம் செய்வதிலும் இந்தியா ஈடுபடும். இந்த கொரோனாகாலத்தில், 150-க்கு மேற்பட்ட நாடுகளுக்கு அத்தியாவசிய மருந்துகளை இந்தியா அனுப்பிவைத்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ... |
கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது. |
ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ... |