தேர்தல் வெற்றி; ஒவ்வொருவரின் வளர்ச்சிக்காகவும் பணியாற்றுவோம்

மத்திய பிரதேசம் உள்பட நாடுமுழுவதும் மொத்தம் 58 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் 40க்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக. வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில், நாடுமுழுவதும் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக.வுக்கு வெற்றியை வழங்கிய மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி அவரது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

மத்திய பிரதேச மக்கள் இன்று மாநிலத்தின் நிலையான, வலுவான அரசை தேர்வுசெய்துள்ளனர். பாஜக மீது ம.பி., மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி. ம.பி.,யில் சிவராஜ்சிங் தலைமையிலான அரசின் வளர்ச்சிப்பயணம் இன்னும் வேகம் எடுக்கும்.

உ.பி., இடைத்தேர்தலில் பா.ஜ.க மீது நம்பிக்கை வைத்து ஓட்டளித்த அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றி. உ.பி., அரசின் முயற்சிகளுக்கு, இடைத்தேர்தல் முடிவுகள் அதிக உத்வேகத்தை அளிக்கும். யோகிஅரசு, மாநில வளர்ச்சியில் புதியஉயரங்களை தொடும்.

தெலுங்கானா மாநிலம் துபாக்கா மற்றும் கர்நாடக மாநிலம் ஷிரா, ராஜராஜேஸ்வரா நகரில் பெற்றவெற்றி வரலாற்று சிறப்பு வாய்ந்தது. இதற்காக பா.ஜ., கட்சியினர் கடுமையாக உழைத்தனர். பா.ஜ., வளர்ச்சி திட்டங்களை மக்களிடம் அவர்கள் நல்லபடியாக கொண்டு சேர்த்தனர். குஜராத்துடனான பா.ஜ.,வின் பிணைப்பு பிரிக்க முடியாதது. இடைத்தேர்தலில் 8 தொகுதிகளிலும் எங்களுக்கு வெற்றிஅளித்த மக்களுக்கு நன்றி.

ஜனநாயகத்தின் முதல்பாடத்தை பீகார் உலகிற்கு கற்பித்துள்ளது. ஜனநாயகம் எவ்வாறு பலப்படுத்தப் படுகிறது என்பதை இன்று பீகார் மீண்டும் உலகிற்கு தெரிவித்துள்ளது. பீகார் இளைஞர்கள், பெண்கள் எங்களை நம்பி ஓட்டளித்துள்ளனர். இந்த இளமை ஆற்றல், எங்களை முன்பைவிட அதிகமாக உழைக்க ஊக்குவித்துள்ளது.பீகாரில் மாநிலவளர்ச்சி மற்றும் ஒவ்வொருவரின் வளர்ச்சிக்காகவும், நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம் என மீண்டும் உறுதிஅளிக்கிறேன். மக்களுக்கு என் நன்றிகள்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...

மல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்

மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ...