அமித்ஷாவுக்கு பாஜக தலைவர் நன்றி தெரிவித்துள்ளார்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்று முன்தினம் பா.ஜ., மாநிலத் தலைவர் வீரேந்திர சச்தேவா சந்தித்து நன்றி தெரிவித்தார்.

டில்லி சட்டசபைத் தேர்தலில் பா.ஜ., 48 தொகுதிகளில் வெற்றி பெற்று, ஏறக்குறைய 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

கடந்த 20ம் தேதி ராம்லீலா மைதானத்தில் புதிய பா.ஜ., அரசு பதவியேற்கும் விழா நடைபெற்றது. இதனால் பா.ஜ., தலைவர்கள் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பா.ஜ., மாநிலத் தலைவர் வீரேந்திர சச்தேவா சந்தித்து, சட்டசபை தேர்தல் வெற்றிக்காக நன்றி கூறினார்.

இந்த சந்திப்பு குறித்து, தன் ‘எக்ஸ்’ பக்கத்தில் புகைப்படத்தை பகிர்ந்து சச்தேவா வெளியிட்ட பதிவு:

அமித்ஷாவை சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது. அவர் நம் ஒவ்வொருவருக்கும் வழிகாட்டியாக இருக்கிறார். அவரது வழிகாட்டுதலும் தொலைநோக்குப் பார்வையும் வரலாற்றை தொடர்ந்து வடிவமைக்கின்றன.

அவரது தலைமைத்துவம் மற்றும் சாணக்கியதனத்துக்கு சான்றாக, டில்லியில் பா.ஜ.,வுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி கிடைத்தது.

இதற்காக என் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எப்போதும் போல, அவரது ஆசீர்வாதங்களுக்கு நன்றி!

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...