பாஜக தொண்டர்கள் கடுமையாக உழைத்தால் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றமுடியும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
தமிழகம் வருகைதந்த உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா சென்னையில் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசியவர் பல்வேறு மாநிலங்களில் பாஜக எப்படி ஆட்சிஅதிகாரத்தை கைப்பற்றியது என்பது குறித்து விவரித்தார்.
குறிப்பாக திரிபுரா, பீகாரில் அதிக இடங்களில் வென்று பாஜக அதிகாரத்தைகைப்பற்றி இருப்பதையும் சுட்டிக்காட்டினார். இதேபோல் அடுத்த ஆண்டு சட்டசபைதேர்தல் நடைபெறும் தமிழகம், மேற்கு வங்கத்திலும் பாஜக அதிக இடங்களை கைப்பற்றும் என நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் கட்சிதொண்டர்கள் கடுமையாக உழைத்தால் தெலுங்கானா, ஆந்திராவிலும் பாஜகவால் அதிகாரத்தை கைப்பற்ற முடியும் என்றார் அமித்ஷா. இந்தஆலோசனை கூட்டத்தின் போது ஆளும் அதிமுகவுடனான கூட்டணிகுறித்து சில நிர்வாகிகள் அதிருப்தியும் தெரிவித்தனராம்.
இதற்கு பதிலளித்த அமித்ஷா, கூட்டணியைபற்றி கட்சி மேலிடம் பார்த்துகொள்ளும். முதலில் பாஜகவின் உள்கட்டமைப்பை நீங்க வலுப்படுத்துங்க.. பூத்அளவில் கமிட்டிகளை அமையுங்க என கூறியிருக்கிறார்.
கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ... |
மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ... |
எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ... |