ஒரு நாடு, ஒருதேர்தல் என்பது இந்தியாவின் தேவை

மகாத்மா காந்தியின் உத்வேகத்தையும் சர்தார் வல்லபாய் பட்டேலின் அர்ப்பணிப்பையும் நினைவுகூரும் நாள் இது . கடந்த 2008ஆம் ஆண்டு இதேநாளில் மும்பையில் தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்றது . இன்று தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா புதியவடிவில் போராடி வருகிறது.

கடந்த 1970களில், அதிகார பிரிவினைக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, எனினும் நல்லொழுக்கம் மற்றும் அதிகாரப்பிரிவினை குறித்து அரசியலமைப்பில் தெரிவித்துள்ளது போலவே, அரசியலமைப்பின் வாயிலாக அதற்கு விடைஅளிக்கப்பட்டது. அவசரநிலைக்குப் பிறகு அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, சட்டமன்றம் நிர்வாகம் மற்றும் நீதித் துறையில், கட்டுப்பாடுகளும், இருப்புகளும் மேலும் கடுமையாக்கப் பட்டன. அரசின் 3 கிளைகளின் மீது 130 கோடி இந்தியர்கள் வைத்துள்ள நம்பிக்கையின் அடிப்படையில் இது சாத்தியமாக்கப் பட்டது, இந்த நம்பிக்கை காலப்போக்கில் மேலும் வலுவடைந்துள்ளது.

நமது அரசியலமைப்பின் வலிமை, நெருக்கடியான தருணங்களில் நமக்குஉதவிகரமாக இருக்கிறது . இந்திய தேர்தல்முறையின் நெகிழ்வு தன்மையும் கொரோனா பெருந்தொற்றில் நமது எதிர்வினையும் இதனை நிரூபித்துள்ளது.

சர்தார் சரோவர் அணைதிட்டம் பல ஆண்டுகள் நிலுவையில் இருந்ததால் குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் மக்களுக்கு அதன்பயன்கள் தடைபட்டு இருந்தது. அணை கட்டுமானப் பணிகள் முடிவடைந்த பின்னர், இந்தப் பலன்கள் அவர்களை எட்டியது.

உரிமைகள், கண்ணியம் மற்றும் தன்னம்பிக்கையின் அடிப்படையாக கடமைகளை கருதவேண்டும் “நமது அரசியலமைப்பில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன, எனினும் கடமைகளுக்கு அளிக்கப் பட்டிருக்கும் முக்கியத்துவம் ஒருசிறப்பு அம்சமாகும். மகாத்மா காந்தி இதில் அதிகஈடுபாடு கொண்டிருந்தார். உரிமைகள் மற்றும் கடமைகளுக்கு இடையே ஓர்நெருக்கத்தை அவர் கண்டார். நமது கடமையை நாம் நிறைவேற்றும் போது நமது உரிமைகள் தாமாகவே பாதுகாக்கப்படுவதாக அவர் கருதினார்”,

அரசியலமைப்பின் மாண்புகள் அனைவரையும் சென்றடையவேண்டும். வாடிக்கையாளரைத் தெரிந்து கொள்ளுங்கள் என்பது டிஜிட்டல் பாதுகாப்பிற்கு எப்படி ஓர் சிறப்பு அம்சமோ அதேபோல் உங்கள் தொகுதியை தெரிந்து கொள்ளுங்கள் என்பதும் அரசியலமைப்பைப் பாதுகாக்கும் கேடயமாகவிளங்கும். அனைத்து சட்டங்களுடன் மக்கள் நேரடித்தொடர்பை உணரும் வகையில் சட்டத்தின் மொழி எளிமையானதாகவும் அவர்களுக்கு எளிதில்கிடைக்கும் வகையிலும் அமைய வேண்டும் . வழக்கொழிந்த சட்டங்களை நீக்கும்முறைகள் எளிமையானதாக இருக்க வேண்டும் , சட்டத்திருத்தம் மேற்கொள்ளும் போது பழைய சட்டங்கள் தாமாகவே ரத்து செய்யப் பட்டுவிடும் முறையை உருவாக்கலாம் .

ஒரு நாடு, ஒருதேர்தல் என்பது விவாதத்திற்குரிய விஷயம் மட்டுமல்ல, இது இந்தியாவின் தேவையும்கூட. ஒவ்வொரு சிலமாதங்களுக்கு இடையிலும் வெவ்வேறு இடங்களில் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. இது வளர்ச்சி பணிகளுக்கு இடையூறாக இருக்கிறது என்பதை அனைவரும் அறிவீர்கள். இதற்காக நாம் தீவிரமாக சிந்திக்கவேண்டும். இதற்கான வழியை நாம் ஏற்படுத்த வேண்டும். நாடுமுழுவதும் பாராளுமன்ற, சட்டசபை தேர்தல்கள் ஒரேநேரத்தில் நடத்தப்பட வேண்டும்.

மாணவர்கள் பாராளுமன்றத்தை நடத்துவது குறித்து யோசனை தெரிவித்த பிரதமர், இதனை, பேரவைத் தலைவர்களே வழிகாட்டி நடத்தலாம் என்று கூறினார்.

80வது அகில இந்திய தலைமை அலுவலர்கள் மாநாட்டில் காணொலிவாயிலாக பங்கேற்று பிரதமர் மோடி பேசியது:

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

தொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)

டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ...

ஆண்மையை அதிகமாக்கும் வழிகள்

அரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை 50 கிராம், ...