தெலுங்கானாவில் இருந்து காவிகோடு

ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்தியாவில் பல்வேறு மாநிலகட்சிகள் ஆச்சரியதக்க வகையில் வளர்ந்து தேசியகட்சிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துவருகின்றன. 60களின் மத்தியில் திமுக தொடங்கி வைத்த அந்த அதிரடிபாணி அரசியலை தற்போது ஜெகன் மோகன் ரெட்டி வரை தொடர்ந்து செய்து வருகிறார்கள். சிலநேரங்களில் தொடர்ந்து செய்ய முடியாமல் தேர்தல் தோல்விகள் இடையிடையே வந்தாலும் மக்கள்மனதில் அவர்கள் அசைக்க முடியாத இடத்தை பெற்றிருந்தார்கள். தமிழகத்தில் கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆந்திராவில் என்டிஆர், நாயுடு, ஒரிசாவில் பிஜி பட்நாயக், கர்நாடகாவில் தேவகவுடா, பீகாரில் லாலு, நிதீஷ், மேற்கு வங்கத்தில் மம்தா, மராட்டியத்தில் சரத் பவார் போன்ற தலைவர்கள் இவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள். இவர்களில் பெரும்பாலோர் காங்கிரஸ்ஸில் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்திலேயே அந்தகட்சிக்கு எதிராக அரசியல் புரிந்தார்கள், வெற்றியும் பெற்றார்கள். அவர்களுடன் சிலர் கூட்டணியும் வைத்தார்கள். ஆனால் ஒத்து வராதவர்களை அரசியல் களத்தில் இருந்து அவர்களால் அப்புறப்படுத்த முடியவில்லை. ஏனென்றால் அவர்களுக்கு என்று மக்கள் ஆதரவு தொடர்ந்து இருந்துவந்தது.

ஆனால் தேசிய கட்சிகள் என்று பார்த்தால் காங்கிரஸ் தொடர்ந்து அதிகாரத்தில் இருந்துவருந்தது. கிட்டதட்ட 50 ஆண்டுகாலம் இந்தியாவை ஆட்சிசெய்தது. தற்போது  40 வயதுடைய பாஜக ஒவ்வொருமாநிலமாக சென்று மாநில கட்சிகளை சூறையாடிவிட்டு தென் இந்தியாவில் தற்போது பார்வையை செலுத்தியுள்ளது. கட்சி தொடங்கி 40 ஆண்டுகளுக்கும் குறைவாக உள்ளாதால் அதன் வேகத்துக்கும், பாய்ச்சலுக்கும் பழம்தின்று கொட்டை போட்ட காங்கிரசாலும் ஈடுகொடுக்க முடியவில்லை, மாநில கட்சிகளாலும் தடை போட முடியவில்லை. தற்போது பார்வை தென்இந்தியாவின் எல்லையான தெலுங்கானா மாநிலத்தை நோக்கி திரும்பியுள்ளதை சிலதேர்தல் முடிவுகளின் பார்த்தால் நம்மால் எளிதில் புரிந்துகொள்ள முடியும்.

தெலுங்கானா மாநிலத்தில் கடந்த ஆண்டு நாடாளுமன்றதேர்தல் முன்பு வரை மாநில பாஜக என்பது காணகிடைக்காத ஒருகட்சியாகவே இருந்தது. தேர்தலுக்கு சிலமாதங்கள் முன்பு இந்த விவகாரம் அமித்ஷா காதுக்கு எட்டியது. புதிய பொறுப்பாளர்கள் போட்டார். அவருக்கே உரிய சிலஅரசியல் சடுகுடுகளை ஆடினார். விளைவு கேசிஆரின் கோட்டையான அங்கு நான்கு தொகுதிகளில் வெற்றிபெற்று பாஜக தன்னுடைய உறுப்பினர்கள் நாடாளுமன்றம் அனுப்பியது. இதைக் கூட மோடி அலை என்று சொல்லி மனசை தேற்றிக்கொள்ள டிஆர்எஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் முயலும். ஆனால் கடந்தவாரம் துபக் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் டிஆர்எஸ் கட்சியிடம் இருந்து தொகுதியைவென்றது பாஜக. இதை சற்றும் எதிர்பாராத டிஆர்எஸ் அதிர்ந்துகிடக்கிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் மைதானத்திற்குள்ளே அனுமதிக்கப்படாமல் வெளியேற்றப்பட்டது. இடைத்தேர்தலில் அதுவும் ஆளும்கட்சி தொகுதியில் பாஜகவின் வெற்றியை அரசியல்தெரிந்த யாரும் எளிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.

அதேபோன்று ஒரு மாயாஜலத்தை இன்னும் மூன்றுநாட்களில் நடைபெற இருக்கின்ற ஹைத்ராபாத் மாநகராட்சி தேர்தலில் செய்துகாட்ட தயாராக இருங்கள் என்று டெல்லி பாஜக தலைமை மாநில பாஜகவினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்கள். விளைவு மாநிலம் முழுவதும் தற்போது பாஜககூட்டங்கள், பேரணிகள் என்று கடந்த ஒருவாரமாக தலைநகரை கலக்குகிறார்கள் தாமரைவாசிகள். இதையும் தாண்டி ஒருமாநகராட்சி தேர்தல் பிரச்சாரத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவே நேரடியாக களத்திற்குவர இருக்கிறார். தெலுங்கானாவில் இருந்து காவிகோடு போட பாஜக தயாராகிவிட்டது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திர ...

நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திர வீரர்களின் கனவை நனவாக்குவோம் நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திர வீரர்களின் கனவை நனவாக்குவோம் என ...

பாதுகாப்பற்ற பணிச் சூழல் திறனற ...

பாதுகாப்பற்ற பணிச் சூழல் திறனற்றவர்களின் பரிசு காலநிலை பாராது பொது மக்களுக்காக உழைக்கும் அரசு ஊழியர்களில், ...

இந்தியா வாழும் நாகரீகங்களின் இ ...

இந்தியா வாழும் நாகரீகங்களின் இருப்பிடம் 1. 74ஆவது குடியரசுத் திருநாளை முன்னிட்டு, உள்நாட்டிலும், அயல்நாடுகளிலும் ...

இடைதேர்தலில் பாஜக போட்டியிட வே ...

இடைதேர்தலில்  பாஜக போட்டியிட வேண்டும் என நாடே எதிர்பார்க்கிறது ஈரோடு கிழக்கு இடைதேர்தலில் பாஜக போட்டியிட வேண்டும் என ...

ஆவணபடம் நாட்டின் ஒருமைபாட்டை ச ...

ஆவணபடம் நாட்டின் ஒருமைபாட்டை சீர்குலைக்கும் வேலை பிரதமர் நரேந்திர மோடி குறித்த பிபிசி ஆவணபடத்துக்கு மத்திய ...

திமுகவுக்கு ஆங்கிலேயர் ஆட்சிய ...

திமுகவுக்கு ஆங்கிலேயர் ஆட்சியே பரவா இல்லை.. திமுகவுக்கு ஆங்கிலேயர் ஆட்சியே பரவா இல்லை.. கோவில்களை ஒழுங்கா ...

மருத்துவ செய்திகள்

தோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை

பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ...

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...