வேளாண் சீர்திருத்த சட்டம் புதிய உரிமை மற்றும் வாய்ப்புகளை வழங்கவல்லது

பிரதமர் நரேந்திரமோடி அகில இந்திய வானொலியில் ஒவ்வொருமாத இறுதி ஞாயிற்று கிழமையன்று மன் கி பாத் என்ற நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு உரையாற்றுவதுவழக்கம். இதன்படி பிரதமர் மோடி இன்று பேசும்பொழுது, சமீபத்திய வேளாண் சீர்திருத்தங்கள் விவசாயிகளுக்கு புதியசந்தர்ப்பங்களுக்கான கதவுகளை திறந்துள்ளன. பலஅரசியல் கட்சிகளால் உறுதி அளிக்கப்பட்ட விவசாயிகளின் தசாப்தகால பழமையான வேண்டுகோள்கள் தற்பொழுது தீர்க்கப்பட்டு உள்ளன.

நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேறிய வேளாண்சீர்திருத்த சட்டங்கள், விவசாயிகளுக்கான தடைகளை உடைத்தது மட்டுமின்றி, அவர்களுக்கான புதிய உரிமைகள் மற்றும் வாய்ப்புகளையும் வழங்கிஉள்ளன.

இச்சட்டத்தின் கீழ், வேளாண் கொள்முதல் பொருட்களுக்கு 3 நாட்களுக்குள் விவசாயிகளிடம் பணம்வழங்க வேண்டியது கட்டாயம். பணம் சென்றுசேரவில்லை எனில் விவசாயி புகார் அளிக்கலாம்.

இதில், மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், சப்-டிவிசனல் மாஜிஸ்திரேட் ஒருமாதத்திற்குள் விவசாயியின் புகாரை பற்றி விசாரிக்கவேண்டும். இதற்கு எடுத்துக்காட்டாக நடந்த ஒரு சம்பவம் பற்றி நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். மராட்டியத்தின் துலே நகரில் ஜிதேந்திரா போய்ஜி என்ற விவசாயி இந்த புதியவேளாண் சட்டங்களை பயன்படுத்தி உள்ளார்.

அவர் மக்கா சோளம் பயிரிட்டு சரியானவிலைக்கு விற்க முடிவு செய்துள்ளார். மொத்தம் ரூ.3.32 லட்சம் அவருக்கு கொடுப்பது என ஒப்புதலானது. இதற்காக அவருக்கு ரூ.25 ஆயிரம் முன்பணம் கொடுக்கப்பட்டது.

15 நாட்களில் அவருக்கு மீதிதொகை கிடைக்கும் என ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால் அவர் தொகையை பெறவில்லை. இதுபற்றி புகார் அளித்த ஒருசில நாட்களில் மீதிதொகை அவருக்கு வந்துசேர்ந்தது என கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கடினமான காலக்கட்டத்திலும் இந் ...

கடினமான காலக்கட்டத்திலும் இந்தியா உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் ...

ராகுல்காந்தி மீது ஒழுங்கு நடவட ...

ராகுல்காந்தி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் பிரதமர் நரேந்திர மோடியையும், தொழிலதிபர் அதானியையும் தொடர்பு படுத்தி ...

கர்நாடகாவின் போர்ப்படை தளபதிய ...

கர்நாடகாவின் போர்ப்படை தளபதியாகும் அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை கர்நாடக மாநிலதேர்தல் ...

விளையாட்டுத் துறையை விளையாட்ட ...

விளையாட்டுத் துறையை  விளையாட்டு வீரர்களின் பார்வையில் அணுக துவங்கியுள்ளோம் ''விளையாட்டுத் துறையை தங்கள் வாழ்க்கையாக தேர்ந்தெடுக்க இளைய தலைமுறையினரை ...

ஆசியாவிலேயே மிகப்பெரிய ஹெலிகா ...

ஆசியாவிலேயே மிகப்பெரிய ஹெலிகாப்டர் தொழிற்சாலை; பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பு கர்நாடகா மாநிலம் பெங்களூரு சென்ற பிரதமர்மோடி மாதவரா அருகில் ...

அனைவரும் இணைவோம்-அனைவரின் வளர் ...

அனைவரும் இணைவோம்-அனைவரின் வளர்ச்சிக்காக முயற்சிப்போம் பிரதமர் திரு நரேந்திர மோடி, அசாம் மாநிலம் பார்பேட்டாவில் ...

மருத்துவ செய்திகள்

புற்றுநோய்க்கான மருத்துவம்

பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ...

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...

முடி கருமையாக

நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ...