விவசாயிகள் நலனுக்காக 7 திட்டங்கள் அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர்நரேந்திர மோடி தலைமையில் இன்றுநடைபெற்ற மத்திய அமைச்சரவைக்கூட்டத்தில், விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்தவும், அவர்களின்வருமானத்தை அதிகரித்து வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தவும் ரூ.14,235.30 கோடிமதிப்பீட்டில் ஏழுதிட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

1)   டிஜிட்டல் வேளாண் இயக்கம்: டிஜிட்டல்பொதுஉள்கட்டமைப்பின் அடிப்படையில், டிஜிட்டல் வேளாண் இயக்கம் விவசாயிகளின் வாழ்க்கையைமேம்படுத்த தொழில்நுட்பத்தைப்பயன்படுத்தும். இந்த இயக்கத்திற்கு மொத்தம் ரூ.2,817 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தஇயக்கத்தில் கீழ்க்கண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மண் பரப்பு

டிஜிட்டல் பயிர் மதிப்பீடு

டிஜிட்டல் மகசூல் மாடலிங்

பயிர் கடனுக்கான இணைப்பு

செயற்கை நுண்ணறிவு மற்றும் பெருந்தரவு போன்ற நவீன தொழில்நுட்பங்கள்

வாங்குபவர்களுடன் இணைப்பு

மொபைல் போன்களில் புதிய அறிவைக் கொண்டு வருதல்

2. உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பிற்கான பயிர்அறிவியல்: இதற்கான மொத்தஒதுக்கீடு ரூ.3,979 கோடி. இந்த முயற்சி விவசாயிகளைபருவநிலை நெகிழ்திறனுக்குதயார்படுத்துவதுடன்  2047-ம் ஆண்டுக்குள் உணவுபாதுகாப்பை வழங்கும். இது, ஆராய்ச்சி மற்றும் கல்வி, தாவர மரபியல் வள மேலாண்மை, உணவு மற்றும் தீவனப்பயிருக்கான மரபியல் மேம்பாடு, பயறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துப் பயிர் பெருக்கம், வணிகப்பயிர்களைப் பெருக்குதல், பூச்சிகள், நுண்ணுயிரிகள், மகரந்தச் சேர்க்கையாளர்கள் போன்றவற்றைப் பற்றியஆராய்ச்சி என 7 அம்சங்களைக் கொண்டதாகும்.

3. வேளாண் கல்வி, மேலாண்மை மற்றும் சமூகஅறிவியலை வலுப்படுத்துதல்: மொத்தம் ரூ.2,291 கோடி ஒதுக்கீட்டில் இந்த நடவடிக்கை வேளாண் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை தற்போதைய சவால்களுக்கு தயார்படுத்தும்.

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில், வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வியை நவீனமயமாக்குதல், புதிய கல்விக்கொள்கை 2020, டிஜிட்டல் டிபிஐ, செயற்கைநுண்ணறிவு, பெருந்தரவு போன்ற  நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல்,  இயற்கைவிவசாயம் மற்றும் பருவநிலைநெகிழ்திறனை சேர்த்தல் ஆகியவற்றின் அடிப்படையில் இது செயல்படும்.

4. நிலையான கால்நடை ஆரோக்கியம் மற்றும் உற்பத்தி: மொத்தம் ரூ.1,702 கோடியில், கால்நடைகள் மற்றும் பால் மூலம் விவசாயிகளின் வருமானத்தைஅதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது, கால்நடை சுகாதார மேலாண்மை மற்றும் கால்நடைகல்வி,  பால் பண்ணை உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு, விலங்குமரபியல் வள முகாமைத்துவம், உற்பத்தி மற்றும் மேம்பாடு, கால்நடை ஊட்டச்சத்து மற்றும் சிறிய அசைபோடும்விலங்குகள் உற்பத்திமற்றும் மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கியது.

5. தோட்டக்கலையின் நிலையானவளர்ச்சி: மொத்தம் ரூ.1,129.30  கோடி செலவில் இந்த நடவடிக்கை தோட்டக்கலை தாவரங்களிலிருந்து விவசாயிகளின்வருமானத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது, வெப்பமண்டல, துணைவெப்பமண்டல மற்றும்மிதவெப்ப மண்டல தோட்டக்கலை பயிர்கள், வேர், கிழங்கு, குமிழ்மற்றும் வறண்ட பயிர்கள், காய்கறி, மலர் வளர்ப்பு மற்றும் காளான் பயிர்கள், தோட்டப்பயிர்கள், மசாலா, மருத்துவ மற்றும் நறுமண தாவரங்களை உள்ளடக்கியது.

6. ரூ.1,202 கோடியில் வேளாண் அறிவியல் மையத்தை வலுப்படுத்துதல்

7. ரூ.1,115 கோடியில் இயற்கை வள மேலாண்மை

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் எம்:ஜி:ஆர் – பிரதமர் மோடி புகழாரம் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி ...

சிங்கப்பூர் அதிபருடன் பிரதமர் ...

சிங்கப்பூர் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு இந்தியா வந்துள்ள சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னத்தை பிரதமர் ...

திறன் மேம்பாட்டில் இந்தியா இரண ...

திறன் மேம்பாட்டில் இந்தியா இரண்டாவது இடம் – பிரதமர் மோடி மகிழ்ச்சி செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் பசுமை தொழில்கள் ...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது ...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது சம்பள கமிஷன் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு 8 வது சம்பள கமிஷன் ...

திருக்குறளின் போதனைகள் உலகம் ம ...

திருக்குறளின் போதனைகள் உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன – கவர்னர் ரவி 'திருக்குறளின் போதனைகள் இப்போது உலகம் முழுதும் எதிரொலிக்கின்றன' என, ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குக ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது – பிரதமர் மோடி புகழாரம் திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது ...

மருத்துவ செய்திகள்

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...