பழைய தில்லி ரயில்நிலையத்தில், செஞ்சிலுவை சங்கத்துடன் இணைந்து பொது மக்களுக்கு முக கவசம் மற்றும் சோப்பு ஆகியவற்றை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் இன்று வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
கொவிட்டுக்கு எதிரான போராட்டத்தில், நாம்விரைவில் 11 மாதங்களை நிறைவு செய்யவுள்ளோம். அப்போதிருந்து, நம்மைபாதுகாக்கும் விதிமுறைகள், சுகாதாரம் மற்றும் சமூக இடைவெளி. நமது மிகப்பெரிய ஆயுதம் முககவசம் மற்றும் கிருமிநாசினி.
இந்தசோப் மற்றும் முககவசம் வழங்கும் பின்னணியில் மிகப்பெரிய தகவல் உள்ளது. அந்த தகவலை பரப்புவதுதான் இதன் நோக்கம். மக்களிடம் பலவித வழிகள் மற்றும் நடவடிக்கைகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு முயற்சிக்கிறது. இவற்றை அமல்படுத்துவதில், சுமை தூக்குபவர்கள், வாடகை கார், ஆட்டோ சங்கங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.
பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ், முககவசங்கள், பிபிஇ கவசஉடைகள், வென்டிலேட்டர்கள் போன்றவற்றின் தயாரிப்பில் இந்தியா தற்சார்பாக உள்ளது. இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பிபிஇ உடைகள் தயாராகின்றன. தடுப்பூசி தயாரிப்பில் நமது விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதால், அது சரியானநேரத்தில் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ... |