இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்திசெய்ய 7 நிறுவனங்களுக்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. அந்தநிறுவனங்களின் தடுப்பூசியை மனிதர்களிடம் பரிசோதித்துபார்ப்பது, 2 மற்றும் 3-வது கட்டங்களில் இருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி கொரோனா வைரஸ் தடுப்பூசி உருவாக்கத்தில் கூடுதல் அக்கறைகாட்டி வருகிறார். நேற்று முன்தினம் அவர் ஆமதாபாத், ஐதராபாத், புனே நகரங்களுக்கு சென்று அங்கு தடுப்பூசி உருவாக்குவதில் ஈடுபட்டுள்ள 3 நிறுவனங்களை ஆய்வுசெய்தார்.
இந்த நிலையில், தடுப்பூசி உருவாக்கத்தில் ஈடுபட்டுவருகிற மேலும் 3 நிறுவனங்களான ஜெனோவோ பயோபார்மா, பயாலஜிக்கல் இ, டாக்டர் ரெட்டிஸ் ஆகியவற்றின் குழுவினருடன் இன்றுகாணொலிகாட்சி வழியாக கலந்துரையாடினார். மேலும் கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு தீர்வுகாணும் முயற்சியில் அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டினார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டு உள்ள தகவலில் கொரோனா தடுப்பூசிகளின் வளர்ச்சி மற்றும் உற்பத்தி தொடர்பான மூன்றுகுழுக்களுடன் பிரதமர் மோடி காணொலி சந்திப்புகளை நடத்தினார்.
கொரோனா தொற்றை சமாளிக்க ஒரு தடுப்பூசி கொண்டு வர அந்த நிறுவனங்களில் உள்ள விஞ்ஞானிகள் மேற்கொண்ட முயற்சிகளை பிரதமர் மோடி பாராட்டினார்.
தடுப்பூசி வளர்ச்சிக்கான பல்வேறு தளங்களின் சாத்தியங்களும் விவாதிக்கபட்டன, பிரதம மந்திரி, கூட்டங்களின் போது, தடுப்பூசிபற்றி ஒரு எளியமொழியில் சாதாரண மனிதர்களுக்கு தெரிவிக்க வேண்டியதன் அவசியத்தையும், அதன் செயல் திறன் போன்ற தொடர்புடைய விஷயங்களையும் வலியுறுத்தினார் என கூறி உள்ளது.
பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ... |
அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ... |