உலகளவில் போட்டிபோடும் விதத்தில் புதியவைகளை விஞ்ஞானிகள் உருவாக்க வேண்டும்

தற்சார்பு இந்தியாவை உருவாக்க, விஞ்ஞானிகள் புதுமையைகண்டுபிடித்து போட்டியை ஏற்படுத்த வேண்டும் என விஞ்ஞானிகளுக்கு மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆறாவது இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா 2020-ஐ, அறிவியல் தொழில்நுட்பம், புவிஅறிவியல், சுகாதாரத்துறை ஆகிய அமைச்சகங்கள்   நடத்துகின்றன. இதற்கான முன்னோட்ட நிகழ்ச்சி ‘‘தற்சார்பு இந்தியா மற்றும் உலகளாவிய நலன்’’ என்ற தலைப்பில் நடந்தது.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் தர்மேந்திரபிரதான் பேசியதாவது:

உலகளவில் போட்டிபோடும் விதத்தில் புதியவைகளை விஞ்ஞானிகள் உருவாக்க வேண்டும். சமூகவளர்ச்சியில் அறிவியல் மற்றும் புதுமையின் பங்கு முக்கியமானது. அனைத்து துறைகளிலும், நமது அறிவியல் அறிவு மற்றும் புதுமையை மேம்படுத்தி வலுப்படுத்தவேண்டும் என்பதை கொவிட்-19 தொற்று நிருபித்துள்ளது.

தற்சார்பு இந்தியா திட்டம், சொந்ததேவையை மட்டும் நிறைவேற்றுவதில்லை, அது உலக சமுதாயத்தின்  நம்பிக்கையாக உள்ளது.  யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற பொருள்படும் வகையிலான வசுதைவஹ குடும்பகம் என்ற உணர்வை ஏற்படுத்தும். சமூக, பொருளாதார மேம்பாட்டுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை சரியாக பயன் படுத்தாமல், இந்தியாவின் தற்சார்பு முயற்சியை அடையமுடியாது என பிரதமர் கூறியுள்ளார். வலுவான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு சூழல் மூலம் மிகச்சிறந்த தயாரிப்புகளையும்,சேவைகளையும் நாம் முடியும். நமது பழங்கால பாரம்பரியத்துடன், நவீன அறிவியல் மற்றும் கணிதத்தை ஒன்றிணைத்து நமது விஞ்ஞானிகள் புதுமைகளை படைத்து சாதிக்கவேண்டும்.

விண்வெளி ஆராய்ச்சி, வேளாண்மை, மருத்துவம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் நமது விஞ்ஞானிகள், தொழில் மற்றும் சமூக பிரச்னைகளுக்கும் தீர்வுகாண வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திர ...

நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திர வீரர்களின் கனவை நனவாக்குவோம் நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திர வீரர்களின் கனவை நனவாக்குவோம் என ...

பாதுகாப்பற்ற பணிச் சூழல் திறனற ...

பாதுகாப்பற்ற பணிச் சூழல் திறனற்றவர்களின் பரிசு காலநிலை பாராது பொது மக்களுக்காக உழைக்கும் அரசு ஊழியர்களில், ...

இந்தியா வாழும் நாகரீகங்களின் இ ...

இந்தியா வாழும் நாகரீகங்களின் இருப்பிடம் 1. 74ஆவது குடியரசுத் திருநாளை முன்னிட்டு, உள்நாட்டிலும், அயல்நாடுகளிலும் ...

இடைதேர்தலில் பாஜக போட்டியிட வே ...

இடைதேர்தலில்  பாஜக போட்டியிட வேண்டும் என நாடே எதிர்பார்க்கிறது ஈரோடு கிழக்கு இடைதேர்தலில் பாஜக போட்டியிட வேண்டும் என ...

ஆவணபடம் நாட்டின் ஒருமைபாட்டை ச ...

ஆவணபடம் நாட்டின் ஒருமைபாட்டை சீர்குலைக்கும் வேலை பிரதமர் நரேந்திர மோடி குறித்த பிபிசி ஆவணபடத்துக்கு மத்திய ...

திமுகவுக்கு ஆங்கிலேயர் ஆட்சிய ...

திமுகவுக்கு ஆங்கிலேயர் ஆட்சியே பரவா இல்லை.. திமுகவுக்கு ஆங்கிலேயர் ஆட்சியே பரவா இல்லை.. கோவில்களை ஒழுங்கா ...

மருத்துவ செய்திகள்

நோனியின் மருத்துவ குணம்

மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ...

எருக்கன் செடியின் மருத்துவக் குணம்

இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ...

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...