மேற்கு வங்க மக்களின் எதிர்காலத்துடன் மம்தா விளையாடுகிறார்

மிட்னாப்பூரில் அமித் ஷா தலைமையில் இன்று(டிச.,19) நடந்த கூட்டத்தில், சுவேந்து அதிகாரி, தபாசிமொண்டல், அசோகி திண்டா, சுதிப் முகர்ஜி, சாய்காட் பஞ்சா, ஷில் பத்ரா தத்தா, திபாலி பிஸ்வாஸ், சுக்ரா முண்டா, ஷியாமபதா முகர்ஜி, பிஸ்வஜித் குண்டு, பனஸ்ரீ மைடி உள்ளிட்ட 10 எம்.எல்.ஏ.,க்கள் ஒரு எம்.பி., மற்றும் முன்னாள் எம்.பி., ஒருவர் பா.ஜ.,வில் இணைந்தனர்.

இதனைதொடர்ந்து அமித்ஷா பேசியதாவது: மேற்குவங்க மக்களின் எதிர்காலத்துடன் மம்தா விளையாடுகிறார். மாநிலத்தில் இருந்து திரிணமுல் காங்கிரசை வேரோடு அகற்றவேண்டும். மேற்கு வங்கத்திற்கு பிரதமர் அறிவித்த திட்டங்களை மம்தா தடுக்கிறார். 2020 சட்டசபை தேர்தலில், பா.ஜ., 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெறும். மம்தா ஆட்சியில், மாநிலத்தில் வளர்ச்சி ஏதும் நடைபெறவில்லை. ஊழல், வன்முறை தலைவிரித்தாடுகிறது. மாநில அரசின் தவறான நிர்வாகத்தால், ஏழை மற்றும் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். ஏழைகளிடம் இருந்து கொள்ளை யடிப்பதற்கு மம்தா வெட்கப்பட வேண்டும்.

வரும் சட்ட சபை தேர்தலில், மக்கள் திரிணமுல்லை வேரோடு சாய்ப்பார்கள். திரிணமுல் குண்டர்கள் ஏவிய வன் முறையை பார்த்து நாங்கள் பயப்படமாட்டோம். நீங்கள் தூண்டிவிடும் வன்முறை எங்களைதான் பலப்படுத்தும். மே.வங்கத்தில் பாஜ., தொண்டர்கள் கொல்லப்படுவது தொடர்கிறது. மாநிலத்தில் மாற்றம் ஏற்படுத்துவோம். மேற்குவங்கம் ஒவ்வொரு கட்சிக்கும் ஒருவாய்ப்பு வழங்கியுள்ளது. இந்த முறை பா.ஜ.,விற்கு வழங்கும். மம்தா தலைமையில் தவறான ஆட்சி நடக்கிறது. மக்கள், மம்தாவுக்கு எதிராக உள்ளனர். தேர்தல் நெருங்கும் சமயத்தில் திரிணமுல் காங்கிரசில் மம்தா தனித்து விடப்படுவார். தனது உறவினரை முதல்வராக்கும் முயற்சியில் மம்தா ஈடுபட்டுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாஜக கூட்டணி வெற்றிக்கான காரணம ...

பாஜக கூட்டணி வெற்றிக்கான  காரணம் பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் ...

பீகார் ஆட்சியைத் தக்கவைத்த தேச ...

பீகார் ஆட்சியைத் தக்கவைத்த தேசிய ஜனநாயகக் கூட்டணி பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமை யிலான தேசிய ...

நான் தொழில் செய்வதில் என்ன தவறு

நான் தொழில் செய்வதில் என்ன தவறு "நான் தொழில் செய்வதில் என்ன தவறு இருக்கிறது? எனக்கு ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி ச ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி சம்பாதித்தது மத்திய அரசு மத்திய அரசு கடந்த ஐந்துஆண்டுகளில் தனது அலுவலகங்களில் இருந்து ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வே ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் துணைநிறுவனமான விடா ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

மருத்துவ செய்திகள்

உடல் எடை குறைய

தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ...

வயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்

குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.

மலச்சிக்கல் நீங்க உணவு முறைகள்

புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம்.