முதல்வர் வேட்பாளரை ஏற்றுக் கொள்ளவில்லை என நாங்கள் சொல்லவில்லையே

தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக் கிழமை பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் கூறியதாவது;  தேசிய ஜனநாயக கூட்டணியில் பிரதமர்வேட்பாளர் அறிவிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கலின்போது நமது முதல்வரும் சென்றார். இது, வேட்புமனு தாக்கல் செய்யும்போது கடைப்பிடிக்கப்படும் வழக்கமான நடைமுறை. இப்போது, அதிமுகவில் முதல்வர் வேட்பாளரை அறிவித்துள்ளனர்.

அதற்கு எங்களுடைய தேசிய தலைமை ஒப்புதல் அளித்து அறிவிக்கும் என்றே நான் கூறிவருகிறேன். அதை இப்போதும் கூறுகிறேன். முதல்வர் வேட்பாளரை ஏற்றுக் கொள்ளவில்லை என எந்த இடத்திலும் நாங்கள் சொல்லவில்லை. சிலர் ஏதோ நடக்கவேண்டும் என நினைக்கின்றனர். அது நடக்காது. அதிமுக ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் தேசியஜனநாயக கூட்டணி தொடரும் என அறிவித்தனர்.

இது, எங்களது தேசிய முன்னாள் தலைவரும், தற்போதைய உள்துறை அமைச்சருமான அமித்ஷா இருந்தமேடையில் அறிவிக்கப்பட்டது. இதை அமித்ஷா முறைப்படி மேலிடத்துக்கு சொல்வார். அங்கிருந்து அறிவிப்புவரும். தமிழகத்தில் ஏற்கெனவே தேசிய ஜனநாயக கூட்டணி இருக்கிறது. இக்கூட்டணியின் முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். எங்களதுகூட்டணி வலுவாக உள்ளது.

இக்கூட்டணிதான் வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியை பிடிக்கப்போகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு கூட்டணி கட்சியினர் உட்கார்ந்துபேசுவர். அப்போது பாஜகவுக்கு எத்தனைசீட் என்பது குறித்து நிச்சயமாக முடிவு எடுக்கப்படும். பாஜகவுக்கு ஏபிசி டீம் என எதுவும் தேவைகிடையாது. பாஜக ஒரே டீம்தான். அதிமுக தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளது.

நாங்களும் தேர்தல் பிரசாரத்துக்கு முன்னோட்டமாக வெற்றிவேல் யாத்திரை நடத்தி மக்களைச் சந்தித்தோம். இப்போது, ஆயிரம் இடங்களில் கூட்டங்களை நடத்தி விவசாயிகளைச் சந்தித்துவருகிறோம். எங்களது அகில இந்திய தலைமை கூறிய பிறகு தேர்தல் பிரசாரத்தை முறையாக தொடங்குவோம். ஏழைகள், சிறு விவசாயிகள் உள்ளிட்டோருக்காக பொங்கல் பரிசாக குடும்ப அட்டைக்கு ரூ. 2,500 வீதம் வழங்கப்படும் என தமிழகமுதல்வர் அறிவித்துள்ளதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் முருகன்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணி ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல ஆசியபாரா விளையாட்டில் இந்தியாபெற்ற 111 பதக்கங்கள் என்பது சிறிய ...

தேசியக் கொடி அவமதிப்பு திமுக ம ...

தேசியக் கொடி அவமதிப்பு  திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு இந்திய தேசியக் கொடியை கொண்டு ...

மருத்துவ செய்திகள்

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...

வெண் தாமரைப் பூ

இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ...