உத்தர பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள, மேற்கு பிராந்தியத்தின் பிரத்யேக சரக்கு ரயில் வழித்தடத்தில், சரக்கு ரயில் சேவையை, பிரதமர் மோடி, நேற்று, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக துவக்கிவைத்தார்.
உ.பி.,யில், மேற்கு சரக்கு ரயில் தடச்சேவை திட்டத்தின் கீழ், 5,750 கோடி ரூபாய் செலவில், குர்ஜா – பாவ்புர் இடையே, சரக்குரயில் போக்குவரத்திற்காக, 351 கி.மீ., துாரத்திற்கு பிரத்யேக ரயில் வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தை நாட்டிற்கு அர்ப்பணித்த, பிரதமர் மோடி, பிரயாக்ராஜ் நகரில் அமைக்கப்பட்டுள்ள, மேற்கு சரக்குரயில் தடச் சேவை கட்டுப்பாட்டு நிலையத்தை திறந்துவைத்து, சரக்கு ரயில் சேவையை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
கடந்த, 2006ல் முந்தைய அரசு, மேற்குசரக்கு ரயில் தடச் சேவைக்கு அனுமதி வழங்கியது. ஆனால், திட்டம் ஆவண வடிவிலேயே இருந்தது. கடந்த, 2014 வரை, 1 கி.மீ., ரயில்பாதை கூட போடப்படவில்லை. ஒதுக்கப்பட்ட நிதியும் சரிவர செலவிடபடவில்லை. மத்தியில், 2014ல் பா.ஜ., அரசு அமைந்த பின், நானேநேரடியாக, இத்திட்டத்தில் கவனம்செலுத்தி, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதால், அடுத்த சிலமாதங்களில், 1,100 கி.மீ., ரயில் தட சாலைப் பணிகள் முடிவடைய உள்ளன.
முந்தைய ஆட்சியில், தேர்தல் ஆதாயத்திற்காக, ஏராளமான ரயில்கள் அறிவிக்கபட்டன. ஆனால் அதற்குதேவையான முதலீடு இல்லாததால், செயல்பாட்டிற்கு வரவில்லை. ரயில்வே துறையை நவீனமயமாக்க, கடந்த ஆட்சியில் அக்கறைகாட்டவில்லை. குறைந்தவேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டன. ஆளில்லா கடவுப்பாதைகள் ஆபத்துப் பகுதிகளாக இருந்தன. இத்தகைய மோசமான பணிச்சூழலை, நாங்கள் ஆட்சிக்கு வந்தஉடன் மாற்றிக்காட்டினோம். ரயில்வே பட்ஜெட் முறை ஒழிக்கப்பட்டது.
ரயில் தடங்களில் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டன. ரயில்போக்குவரத்து நவீன மயமாக்கப்பட்டது. நாட்டில், ஆளில்லா கடவுப்பாதைகளே இல்லை என்ற நிலை ஏற்படுத்தப்பட்டது. கடந்த சில ஆண்டுகளில், அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களின் பலன்கள் தற்போது கண்கூடாக தெரிகின்றன. இந்தபுதிய சரக்கு ரயில் தடச்சேவை, ‘தற்சார்பு பாரதம்’ என்ற, கர்ஜனையுடன் இன்று துவங்கியுள்ளது. இதனால், உ.பி.,யில், ஏராளமான தொழில் வாய்ப்புகள் உருவாகும் என்றார்.
ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ... |
இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ... |