ஜார்க்கண்ட் மாநிலம் வழியாக இயக்கப்படும் 6 புதிய வந்தே பாரத் ரயில்களின் சேவையை பிரதமர் மோடி, இன்று துவக்க வைத்தார்.பிரதமர் நரேந்திர மோடி, இன்று ஜார்க்கண்ட் மாநிலம் டாடா நகர் சென்றார். அந்த வழித்தடத்தில் 6 புதிய வந்தேபாரத் ரயில்களின் சேவையை துவக்கி வைத்தார்.இந்த ரயில்கள் டாடாநகர்-பாட்னா, பிரம்மபூர்-டாடாநகர், ரூர்கேலா-ஹவுரா, தியோகர்-வாரணாசி, பாகல்பூர்-ஹவுரா மற்றும் கயா-ஹவுரா ஆகிய வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளன.
இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:புதிய வந்தே பாரத் ரயில்கள் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்டுள்ளன. தினமும் ரயில்களில் சென்று வரும் லட்சக்கணக்கான பயணிகளுக்கு சொகுசானவசதி அளிக்கும் வகையில் இவை உருவாக்கப்பட்டுள்ளன. வேகமான பயண, மேம்பட்ட பாதுகாப்புஅம்சங்கள் மற்றும் சிறந்த வசதிகள் ஆகியவற்றை தரும் நோக்கத்துடன் இந்தரயில்கள் உருவாக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் சேவைகளை துவக்கி வைத்து மோடி பேசியதாவது:
ஜார்க்கண்ட் ரயில்வே துறையை மேம்படுத்த ரூ.7 ஆயிரம் கோடி ஓதுக்கப்பட்டுள்ளது. தற்போது ரூ.650 கோடி மதிப்பீட்டில் ரயில் பாதை வழித்தடங்கள் மற்றும் பயண வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.இம்மாநிலத்தில் பழங்குடி மக்கள் ஆயிரம் பேருக்கு வீடுகள் வழங்கியுள்ளோம். எல்லோருக்கும் எல்லாமே என்ற திட்டத்தை நல்ல முறையில்செயல்படுத்தி வருகிறோம். அதன் ஒரு பகுதியாக ஏழைகள், ஆதிவாசிகள் மற்றும் தலித்துகளுக்கு கூடுதல் முன்னுரிமை அளிக்கிறோம். அதற்கு அடுத்து பெண்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறோம்.இவ்வாறு பிரதமர் மோடி பேசினாார்.
ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ... |
பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ... |
காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ... |