எங்களது பொது எதிரி திமுகதான்

அதிமுக – பாஜக கூட்டணியில் எந்தகுழப்பமும் இல்லை. எங்களது பொதுஎதிரி திமுகதான் என பாஜக மாநில துணைத் தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்தார்.

தொடர்ந்து அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பாஜகவைப் பொறுத்தவரை வேட்பாளரை முடிவுசெய்யும் அதிகாரமும், எந்தத் தொகுதிவேண்டும் எனக் கேட்கும் அதிகாரமும் மாநில தலைமைக்குக் கிடையாது. கட்சியின் மத்திய தலைமைதான் இதுபற்றி முடிவு செய்யும். தமிழகத்தில் பாஜக சார்பில் போட்டியிடப்போவதாக வெளியான 38 தொகுதிகள் அடங்கியபட்டியல் பாஜக தயாரித்தது அல்ல.

அந்த பட்டியலை பாஜக சார்பில் யாரும்வெளியிடவும் இல்லை. இதுபோன்று வெளியிடும் கலாசாரமும் பாஜகவுக்கு கிடையாது. கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த யாரோவெளியிட்ட பட்டியல் அது. நிச்சயமாக அது பாஜகவின் வேலைகிடையாது.

எந்தெந்த தொகுதியை கேட்பது என்பது குறித்து முடிவுசெய்ய கட்சி தலைமை சார்பில் குழு அமைக்கப்படும். அந்தகுழு இன்னும் அமைக்கப்படவில்லை. குழு அமைத்தபிறகே பேசி முடிவு செய்யப்படும். அதிமுக- பாஜக கூட்டணியில் எந்தகுழப்பமும் இல்லை. எங்கள் கூட்டணியில் வேறுகட்சிகள் இணையுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும். பொங்கலுக்கு பிறகு தேர்தல்களம் சூடுபிடித்த பிறகே அது தெரியவரும்.

எங்களைப் பொறுத்தவரை அதிமுக- பாஜக கூட்டணி வலுவாக உள்ளது. ஒவ்வொரு கட்சிகளுக்கும் ஒருகொள்கை இருக்கும். அதற்காக கூட்டணியில் குழப்பம் என்று அர்த்தமல்ல. எங்களது பொது எதிரி திமுகதான்.

அதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். கட்சிதலைமை சொன்னால் தேர்தலில் போட்டியிடுவேன். கட்சி தலைமை எந்ததொகுதியை சொன்னாலும் அங்கு போட்டியிட தயாராக இருக்கிறேன்.

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல்பலாத்கார சம்பவத்தில் குற்றம் செய்தவர்கள் கட்சி பேதமின்றி தண்டிக்கப்பட வேண்டும் என்பதே முன்னாள் போலீஸ் அதிகாரியாக எனது கருத்து என்றார் அவர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...