தேசிய ஜனநாயக கூட்டணியின் பெரியகட்சியான அதிமுகதான் தமிழகத்தில் முதல்வர் வேட்பாளரை தீர்மானிக்கும் என பாஜகவின் மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமிகோயிலில் தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி, தங்கள் கூட்டணியில் பெரியகட்சியான அதிமுகதான், முதலமைச்சர் வேட்பாளரை தீர்மானிக்கும் என்றார்.
அத்துடன், ஓபிஎஸ் – இபிஎஸ் தங்களுக்கு ஆதரவுதருவதால் கே.பி.முனுசாமியின் கருத்தை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை எனவும் அவர்கூறினார்.
இந்நிலையில், முதலமைச்சர் வேட்பாளரை அதிமுகவே முடிவு செய்யும் என்ற சி.டி.ரவி கூறியதற்கு, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வரவேற்பு தெரிவித்துள்ளார்.2021 சட்டமன்ற தேர்தலின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அதிமுக அறிவித்து, தேர்தல்பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றது. அத்துடன் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் சட்சிகளுடன்தான் கூட்டணி அமைக்கப்படும் என்றும் அக்கட்சியினர் தொடர்ந்து கூறிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ... |
அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ... |
ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ... |