மேற்கு வங்காளத்தின் அடுத்த முதல்வர்-

ஒரு தனி மனிதர் எந்த ஒருஅரசியல் பின்னணியும் இல்லாமல் நடிகர் விளையாட்டு வீரர் என்று எந்த ஒருகவர்ச்சி அடையாளமும் இல்லாமல் ஒருமாநிலத்தில்
ஒரு கட்சியின் தலைவராக பதவியேற்று எண்ணி 5 வருடங்களில் 3 தொகுதிகளில் இருந்து ஆட்சியைநோக்கிகொண்டு வர இருக்கிறார் என்றால் அவருடைய
உழைப்பு எப்படி இருந்து இருக்கும் என்று கொஞ்சம் யோசித்து பாருங்கள்.

பிஜேபி வோட்டிங் மெஷினை வைத்துதான் வெற்றி பெறுகிறது என்று கூறும்
கோமாளிகள் தயவுசெய்து மேற்குவங்காளம் சென்று அங்குள்ள ஜங்கிள் மஹால்
பகுதியில் உள்ள பகுதிகளில் உள்ள மக்களிடம் பிஜேபி வோட்டிங் மெஷினை
வைத்துதான் வெற்றி பெறுகிறதா என்று கேட்டுபாருங்கள்.

பதிலுக்கு அவர்கள் உங்கள் கண்ணத்தில் ஒரு அறைவைத்து விடுவார்கள்.இந்த
5 வருடமாக திலிப் கோஷ் என்கிற ஒரே ஒருமனிதன் இந்த மண்ணில் பிறந்த
வளர்ந்தவர் எப்படி இந்தகட்சியை வளர்த்தார் என்பதற்கு நாங்கள்தான் சாட்சி
என்பார்கள்.

அந்த அளவிற்கு ஜங்கிள் மஹால் என்கிற பழங்குடி மக்கள் மிகுந்த காடுகள் நிறைந்த மாவோயிஸ்ட் கள் செல்வாக்குடன் இருந்த மிட்னாப்பூர் ரீஜனில் மேற்கு மிட்னாப்பூர் மாவட்ட.த்தில் உள்ள கோபிபல்லவபூர் என்கிற ஒரு புகழ் பெற்ற கிராமத்தில் பிறந்தார்

மேற்கு மிட்னாப்பூர் மாவட்டம் தான் இ ப்பொழுது ஜார்கிராம் மாவட்டமாகி விட்டது.திலீப் கோஷ் ஒரு சாதாரண குடும்பத்தில் அதாவது மாடுகள்வளர்த்து பால்கறந்து விற்பனை செய்யும் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து  டிப்ளமோ
படித்தவர்

திலீப் கோஷ் என்கிற இவருடைய பெயரில் உள்ள கோஷ் என்பது இவருடைய சாதியான சட கோப் என்கிற யாதவ இனத்தின் அடையாளமாகும்.நம்ம ஊரில் யாதவர்களை கோனார் என்பது போல அங்கு யாதவர்களை சடகோப் என்கிறார்கள்
டிப்ளமோ படித்த திலீப் கோஷ் 1984 ல் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைந்து பணியாற்ற ஆரம்பித்தார். சங்க வேலைகளில்இவருடைய அர்ப்ப ணிப்பு உணர்வை
பார்த்து ஆர்எஸ்எஸ் அமைப்பு இவரை 1999 ல் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொறுப்பாளராக நியமித்தது

திலீப் கோஷ் ராசியை பாருங்கள் மனுசன் அந்தமானில் நுழைந்து சங்கப்பணிகளை செய்ய ஆரம்பித்த ஆறேமாதத்தில் லோக்சபா தேர்தல் வருகிறது. திலீப் கோஷ் என்ன மேஜிக் செய்தாரோ தெரியவில்லை அந்தமானின் வரலாற்றில் முதல் முறையாக பிஜேபி வெற்றி பெற்றது.

அதற்கு பிறகு 2007 வரை அந்தமானில் இருந்த திலீப்கோஷ் அப்பொழுது ஆர்
எஸ் எஸ் தலைவராக இருந்த சுதர்சன் அவர்களால் நாக்பூருக்கு அழைக்கப்பட்டு
அவருடைய உதவியாளராக பணியாற்ற ஆரம்பித்தார்.

திலீப் கோஷ் 2010 ம் ஆண்டு துவக்கத்தில் வடகிழக்கு மாநிலங்களில் ஆர்எஸ்எஸ் இயக்கபணிகளை முடுக்கிவிட சென்று அங்கேயே ஒரு 4 ஆண்டுகளாக வடகிழக்கு மாநிலங்களில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் 2014 லோக்சபா தேர்தலை ஒட்டி முதல் முறையாக பிஜேபி.,க்கு அழைக்கப்பட்டு மேற்கு வங்காள பிஜேபி.,யின் செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார்.

2014 லோக்சபா தேர்தலில் பிஜேபி அமோகமாக வெற்றி பெற்று மோடி பிரதமராக
வந்தவுடன் பிஜேபியை மேற்கு வங்காளத்தில் வளர்க்க விரும்பிய மோடி 2015
ம் ஆண்டு மேற்கு வங்காள பிஜேபி யின் தலைவராக திலீப்கோஷை கொண்டு
வந்தார்.

அப்பொழுதெல்லாம் சவ்ரவ் கங்குலியைதான் எப்படியாவது பிஜேபிக்கு தலைவராக கொண்டுவர அமித்ஷா முயற்சி செய்து கொண்டுஇருந்தார். கங்குலிக்கு அரசியல் ஆசை இருந்தாலும் மம்தாபானர்ஜியை விரோதித்து கொண்டு பிஜேபி க்கு வர விரும்ப வில்லை

அதனால் திலீப் கோஷ்தான் தலைவர் என்றான பிறகு, அமித்ஷா நடிகை ரூபா கங்குலியை மேற்கு வங்காள மாநில மகளிர் .அணித்தலைவியாக கொண்டு வந்தார். ஏனென்றால் திலீப் கோஷ் யாரென்றே அப்பொழுது மேற்கு வங்காள மக்களுக்கு தெரியாது. அதனால் பிஜேபிக்கு ஒருஸ்டார் வெளிச்சம் தேவைப்பட்டதால் ரூபா கங்குலியை மகளிர் அணித் தலைவியாக்கி அவர் கூடவே திலீப் கோஷை அனுப்பி வைப்பார்கள்

2016 சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது ரூபா கங்குலி உடன்தான் திலீப்
கோஷ் அவர்களும் பிரச்சாரம் செய்வார் அப்பொழுது ரூபா கங்குலிக்குகிடைத்த
வரவேற்பும் வெளிச்சமும் திலீப் கோஷ் க்கு கிடைக்காது.

இதனால் திலீப் கோஷ் எப்படியும் நான் பிஜேபியை மேற்குவங்காளத்தில் வளர்த்து ஆட்சியில் அமர வைத்து காட்டுவேன் என்று சபதம்செய்தார்.சபதம் செய்து
விட்டு சும்மா இருந்து விடவில்லை.கடுமையாக உழைத்தார். பிஜேபியை வளர்கக மிட்னாப்பூர் ரீஜனில் இவர் நடத்திய பாத யாத்திரைகள் இருக்கிறதே கணக்கில் அடங்காதவை.

திலீப் கோஷின் உழைப்புக்கு பலன் கிடைத்தது.2016 மேற்கு வங்காள சட்டமன்ற தேர்தலில் சொந்த தொகுதியான காரக்பூர் சதார் தொகுதியில் 10 தடவை
இதில் தொடர்ந்து 8 தடவை வெற்றி பெற்று வந்த காங்கிரஸ் எம்எல்ஏ கியான் சிங் சோகன்பாலை தோற்கடித்து யார் இந்த திலீப் கோஷ்? என்று மேற்கு வங்காள மக்களை ஏறெடுத்து பார்க்க வைத்தார்

இதில் காமெடி என்னவென்றால் திலீப்கோஷ் உடன் நியமிக்கப்பட்டு மீடியா வெளிச்சத்தில் வளர்ந்து வந்த மேற்கு வங்காள மகளிர் அணி தலைவி நடிகை ரூபா கங்குலி வடக்கு ஹௌரா சட்டமன்ற தொகுதியில் மண்ணை கவ்வி விட்டார்.

இதற்கு.பிறகு தான் திலீப் கோஷ் கைகளில் மேற்கு வங்காள பிஜேபியை முழு அளவில் கொடுத்தார்கள்.கடந்த 2016 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு திலீப் கோஷ் காட்டிய அபாரமான உழைப்பினால் பிஜேபிக்கு கடந்த லோக்சபா தேர்தலில் 18 தொகுதிகள் கிடைத்தது என்றால் திலீப் கோஷின் உழைப்பினை அறிந்துகொள்ள முடியும்.திலீப் கோஷ் அவர்களும் மிட்னாப்பூர் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

2015 ல் திலீப் கோஷ் மேற்கு வங்காள பிஜேபி தலைவராக நியமிக்கப்பட்ட பொழுது இவரெல்லாம் தலைவராக வந்தால் பிஜேபிக்கு யார் ஓட்டுபோடுவார்கள்? என்று பிஜேபியில் இருந்தே சிலர் மீடியாக்களில் இவரை கிண்டல் அடித்துபேசினார்கள்.

அவர்கள் அனைவரும் இப்பொழுது வாய்மூடி நிற்கிறார்கள். ஏனெனில் திலீப்கோஷ் தான் அடுத்த மேற்கு வங்காள முதல்வர். சௌரவ் கங்குலி ரூபாகங்குலி
போன்ற வெளிச்சம்பட்ட கிளைகளைதேடி பிஜேபி செல்வதைவிட திலீப் கோஷ் மாதிரியான வெளிச்சம் விழாத வேர்களை தேடி பிடியுங்கள்.
.
அவர்கள் தான் பிஜேபி என்கிற ஆல மரத்தை தாங்கி நிற்கும் ஆர்எஸ்எஸ் என்கிற ஆணி வேர்கள்.3 தொகுதியில் வெற்றிபெற்ற ஒருகட்சி 5 வருடங்களில் 150 தொகுதிகளை தாண்டி ஆட்சியை பிடித்தது என்கிற புதிய வரலாற்றை மேற்கு
வங்காளம் எழுதப்போகிறது எழுத இருக்கிறார் திலீப் கோஷ்..

One response to “மேற்கு வங்காளத்தின் அடுத்த முதல்வர்-”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

மருத்துவ செய்திகள்

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...