‘விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் இரட்டை வேடம் போடுகிறார். அவருக்கு சமூகநீதி பற்றி பேச அருகதை கிடையாது’ என மத்திய அமைச்சர் எல்.முருகன் கடுமையாக சாடியுள்ளார்.
திருமாவளவன் பற்றி கேட்ட கேள்விக்கு பதில் சொல்கிறேன். எல்லாரும் கவனமாக கேளுங்க. சமூகநீதி பற்றி பேசுவதற்கு திருமாவளவனுக்கு அருகதை கிடையாது. சமூக நீதி குறித்து அம்பேத்கர் கூறியது, அனைத்து மக்களுக்கும், கடைக்கோடியில் இருக்கும் மக்கள் அனைவரும் இடஒதுக்கீடு சென்று சேர வேண்டும் என்றார். இதுதான் அம்பேத்கர் எண்ணம், கொள்கை. ஆனால் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த திருமாவளவன் இரட்டை வேடம் போடுகிறார்.
திருமாவளவன் எப்படி ஒரு தலித் தலைவராக இருக்க முடியும். அருந்ததியர் இட ஒதுக்கீடை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த திருமாவளவன் எப்படி தலித் மக்கள் தலைவராக இருக்க முடியும். இவர் எப்படி ஒட்டுமொத்த தமிழகத்தின் தலைவராக இருக்க முடியும்.
அவருடைய சின்ன கட்சி, அந்த அமைப்புக்கான தலைவராக தான் நான் பார்க்கிறேன். அவர் அனைத்து தலித் மக்களையும் ஒரே பார்வையில் பார்க்க வேண்டும். அவருடைய உண்மை முகம் வெளிப்பட்டு கொண்டு இருக்கிறது. அவர் சமூகநீதி பற்றி பேச எந்த அருகதையும் கிடையாது.
சமூகநீதி என்றால் கடைக்கோடியில் இருக்கும் ஒவ்வொரு தலித் மக்களுக்கும் இடஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்பது தான் அம்பேத்கர் கோரிக்கை. இதற்கு தான் அவர் அரசியலமைப்பு சட்டத்தில் இட ஒதுக்கீடை கொண்டு வந்தார். அந்த இடஒதுக்கீடை நீர்த்து போக செய்யும் அளவிற்கு செயலை திருமாவளவன் செய்து கொண்டு இருக்கிறார்.
அதனால் திருமாவளவன் எல்லாம் முதல்வர் ஆகுவதற்கான கனவு எல்லாம் நடக்காது. கவர்னர் உண்மையைச் சொன்னால் தி.மு.க.,வினருக்கு கசக்கிறது; கவர்னருக்கும், முதல்வருக்கும் இடையே முரண்பாடு இருந்து கொண்டேதான் இருக்கிறது. இவ்வாறு எல்.முருகன் கூறினார்.
தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ... |
பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ... |
உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ... |