புதுச்சேரியில் பாஜக ஆட்சி உறுதி

நாராயணசாமியின் தவறான செயல் பாடுகளால் புதுச்சேரி பின்னோக்கி சென்றுள்ளது என பாஜகவில் இணைந்தபிறகு நமச்சிவாயம் சாடியுள்ளார். 2021-ல் பாஜக ஆட்சி புதுச்சேரியில் உறுதி என்றும் குறிப்பிட்டார்.

காங்கிரஸ்சில் உள்ள உட்கட்சிப்பூசலால் அங்கிருந்து விலகி டெல்லியில் இன்று நமச்சிவாயம் பாஜகவில் இணைந்தார்.அதன்பிறகு நமச்சிவாயம் கூறுகையில், “வளமான புதுச்சேரிதான் எண்ணம். அதற்காக பாஜகவில் இணைந்துள்ளோம். புதுச்சேரிக்கான வளர்ச்சியை மோடி கொடுப்பார் என்ற நம்பிக்கையுள்ளது. பிரதமர் மோடி பல்வேறு மேம்பாட்டு திட்டங்களை உருவாக்கி, உலகளவில் இந்தியாவை தலைநிமிரச் செய்தவர். மோடி தலைமையில் இந்தியா ஒளிர்கிறது.

அதுபோல் புதுச்சேரியும் ஒளிரவேண்டும் என்பதேநோக்கம். முதல்வர் நாராயணசாமியின் தவறான செயல்பாடுகளால் புதுச்சேரி பின்னோக்கி சென்றுள்ளது. அதை முன்னோக்கி கொண்டுசெல்லவும், புதுச்சேரியின் வளர்ச்சிக்காகவும் இம்முடிவு எடுத்துள்ளோம்.

நிச்சயமாக புதுச்சேரியில் பாஜக ஆட்சியைகொண்டுவர பாடுபடுவோம். மக்கள் தயாராக உள்ளனர். 2021-ல் பாஜக ஆட்சிமலர்வது உறுதி. வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சியை நிறுவ இரவு பகலாக பாடுபடுவோம்” என குறிப்பிட்டார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பசுமை ஹைட்ரஜன் குறித்த பிரதமரி ...

பசுமை ஹைட்ரஜன் குறித்த பிரதமரின் செய்தி மதிப்பிற்குரிய பிரமுகர்களே,விஞ்ஞானிகளே, புதுமைப் படைப்பாளர்களே, தொழில்துறைத் தலைவர்களே, எனதருமை ...

ப.ஜ.க உறுப்பினர் சேர்க்கை மேட்ட ...

ப.ஜ.க உறுப்பினர் சேர்க்கை மேட்டுப்பாளையத்தில் L.முருகன் தொடங்கிவைத்தார் மேட்டுப்பாளையம்: பா.ஜ.,வின் உறுப்பினர் சேர்க்கை இயக்கமான 'சங்கதன் பர்வா,சதாஸ்யத ...

சைபர் குற்றங்களை தடுத்திட கூடு ...

சைபர் குற்றங்களை தடுத்திட கூடுதல் கமாண்டோக்கள் இலக்கு -அமித் ஷா சைபர் குற்றங்களை தடுத்திட 5 ஆயிரம் சைபர் கமாண்டோக்களை ...

தமிழகத்தில் 47 லட்சம் விவசாயிகள ...

தமிழகத்தில் 47 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர் 'பிரதான் மந்திரி கிஸான் சம்மான் நிதி' எனப்படும், விவசாயிகளுக்கு ...

ஜம்மு – காஷ்மீருக்கு மாநில அந ...

ஜம்மு – காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் -அமித் ஷா உறுதி ஜம்மு, ''சட்டசபை தேர்தலுக்குப் பின், ஜம்மு - காஷ்மீருக்கு ...

எழுத்தறிவு தின கொண்டாட்டங்களி ...

எழுத்தறிவு தின கொண்டாட்டங்களில் ஜக்தீப் தன்கர் பங்கேற்பு நமது வாழ்வில்குறைந்தபட்சம் ஒருவரையாவது எழுத்தறிவு பெற்றவராக மாற்ற ஒவ்வொருவரும் ...

மருத்துவ செய்திகள்

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...

குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) நோய்

நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ...

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...