”தமிழ் கலாசாரத்தை சீர்குலைத்தது, தி.மு.க., -காங்கிரஸ் ., கூட்டணி அரசு,” என, தமிழக பா.ஜ., மேலிடபொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்தார்.
சென்னையில், அவர் அளித்த பேட்டி: அனைத்து பகுதிகளிலும், பா.ஜ.,வை வலுப்படுத்த, நடவடிக்கை எடுத்துவருகிறோம். தமிழ் கடவுள்வேறு, ஹிந்து கடவுள் வேறு கிடையாது; எல்லாம் ஒரே கடவுள்தான். நான் கர்நாடகாவில் இருந்து வருகிறேன். முருகக் கடவுளை வழிபடுகிறேன்; அவர் உலகக்கடவுள். கடந்த, 1965ல் ஹிந்தியை திணித்தது யார்; அப்போது, ஆட்சியில் இருந்தது யார் என, திமுக.,வினரிடம் கேளுங்கள். ஹிந்தி எதிர்ப்புபோராட்டம் காரணமாக, காங்கிரசை, திமுக., தோற்கடித்தது. பின், 2011ல் ஜல்லிக்கட்டை தடைசெய்தது யார்; அப்போது ஆட்சியிலிருந்த, தி.மு.க., – காங்., கூட்டணி அரசு ஜல்லிக்கட்டுக்கு எதிராக, நீதிமன்றத்தில் பிரமாணபத்திரம் தாக்கல்செய்தது.
அவர்கள்தான் தமிழ் கலாசாரத்தை சீர்குலைத்தனர்; பா.ஜ., அல்ல. திருக்குறள், பாரதியார், மாமல்லபுரம், கம்பராமாயணம் குறித்தும், தமிழ்கலாசாரம் குறித்தும், பிரதமர் அதிகம் பேசி வருகிறார். தேசிய கல்வி கொள்கை, 22 மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது. யார் எந்தமொழியையும் படிக்கலாம் என்கிறோம். இந்த வசதியை பா.ஜ., மட்டுமே கொடுத்துள்ளது.
தென் மாநிலங்களில், தமிழகம் அதிகநிதியை, திட்டங்களை, மத்திய அரசிடமிருந்து பெற்றுள்ளது. தமிழக வரலாற்றில், 11 மருத்துவ கல்லுாரிகளை, ஓராண்டில் பெற்றுள்ளது. கர்நாடகாவிற்கு நான்குமருத்துவ கல்லுாரிகள் மட்டுமே வழங்கப்பட்டது. இவ்வாறு, சி.டி.ரவி கூறினார்.
தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ... |
பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ... |
ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ... |