மேற்குவங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் இடையே தொடர்ந்து மோதல்போக்கு நீடிக்கிறது. பாஜக தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆளுங்கட்சி பொய்வழக்கு போட்டு பாஜகவினர் மீது நடவடிக்கை எடுப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப் பட்டுள்ளது.
அவ்வகையில், பிர்மம் மாவட்டத்தில், பாஜக தலைவர் கைதுசெய்யப்பட்டதற்காக, அவரது மகள் அரசாங்கம் மீதான தனது எதிர்ப்பை பள்ளியில் பதிவுசெய்துள்ளார். 10ம் வகுப்பு படிக்கும் அந்த மாணவி, தன் தந்தை மீது போலீசார் பொய்வழக்கு போட்டு அவரை கைது செய்திருப்பதாக கூறியதுடன், அதனை கண்டிக்கும் வகையில், பள்ளியில் அரசுசார்பில் தனக்கு வழங்கப்பட்ட இலவச சைக்கிளை பெற மறுத்துவிட்டார். இதனையடுத்து அந்த சைக்கிள் திருப்பி அனுப்பப்பட்டது.
இதுபற்றி பள்ளி தலைமை ஆசிரியர் கூறுகையில், ‘9 மற்றும் 10ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு அரசாங்கம்சார்பில் வெள்ளிக்கிழமையன்று இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டது. உள்ளூர் பாஜக தலைவர் கைது செய்யப் பட்டதை கண்டித்து, அவரது மகள் சைக்கிளைபெற மறுத்தார். இதுபற்றி உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து, சைக்கிளை திருப்பி அனுப்பினோம்’ என்றார்.
‘என்தந்தை, போலீஸ் காவல் மற்றும் நீதிமன்றகாவலில் இருந்தபோது நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டோம்’ என்கிறார் அந்த மாணவி.
நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ... |
இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ... |