மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி யாராலும் தடுக்கமுடியாது

மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி அமைவதை யாராலும் தடுக்கமுடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் வரும் ஏப்ரலில் நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே நேரடிபோட்டி நிலவுகிறது. பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியதலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட பாஜகவின் மூத்த தலைவர்கள் மேற்கு வங்கத்தில் இப்போதே தீவிரபிரச்சாரம் செய்து வருகின்றனர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மேற்கு வங்கத்தின் கூச்பெகர் பகுதியில் நேற்று பிரச்சாரம் செய்தார். அவர் பேசியதாவது:

பிரதமர் நரேந்திர மோடி வளர்ச்சி பாதையில் ஆட்சி நடத்திவருகிறார். ஒட்டுமொத்த நாட்டையும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்கிறார். முதல்வர் மம்தா பானர்ஜி அழிவுப் பாதையில் ஆட்சி நடத்துகிறார். கடந்த 10 ஆண்டுகள் மேற்குவங்கத்தில் மம்தா ஆட்சி நடத்தியுள்ளார். மாநிலம் இன்னமும் பின்தங்கிய நிலையில் உள்ளது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பிரதமர் பாஜகவுக்கு வாய்ப்பு அளியுங்கள். அடுத்த 5 ஆண்டுகளில் மேற்குவங்கம், தங்கவங்கமாக மாறும்.

மத்திய அரசின் விவசாயிகளுக்கான நிதியுதவியை மம்தா பானர்ஜி தடுத்து நிறுத்தியுள்ளார். ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு திட்டத்தை முடக்கியுள்ளார். இதேபோல மத்திய அரசின் 115 நலத்திட்டங்களை தடுத்து வருகிறார். மேற்கு வங்கத்தை மம்தா அழித்து வருகிறார். மக்களுக்காக அவர் ஆட்சி நடத்தவில்லை. தனது உறவினர்களின் நலனுக்காக ஆட்சி நடத்துகிறார்.

துர்கா பூஜை, சரஸ்வதி பூஜை நடத்துவதற்கு அனுமதி மறுக்க படுகிறது. ஜெய் ராம் நாமத்தை உச்சரிப்பது குற்றமாக கருதப்படுகிறது. இங்குஇல்லாமல் பாகிஸ்தானிலா ஜெய் ராம் நாமத்தை உச்சரிக்க முடியும். சட்டப்பேரவை தேர்தல் முடிந்தபிறகு மம்தாவே, ஜெய் ராம் என கூறுவார்.

ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 130 பாஜக தொண்டர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். பெண்களுக்கு எதிரான குற்றங்கள், அரசியல் படுகொலைகளில் மேற்குவங்கம் முதல் இடத்தில் உள்ளது.

மேற்கு வங்க மக்கள் கால்பந்து விளையாட்டை அதிகம்நேசிக்கின்றனர். ஆட்சி ஆட்டத்தில் மம்தா அரசு பல்வேறு தவறுகளை இழைத்துவருகிறது. இதை மக்கள்உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். விரைவில் ராமர் அட்டையை காண்பித்து மம்தாவை ஆட்சி ஆட்டத்தில் இருந்து வெளியேற்றுவார்கள். மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி அமைவதை யாராலும் தடுக்கமுடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

 

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அயோத்திக்கு 34 சிறப்பு ரயில்… ம ...

அயோத்திக்கு 34 சிறப்பு ரயில்… மொத்த செலவும் மத்திய அரசே உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்தமாதம் ராமர் கோயில் திறக்கப்பட்டது. ...

அரசியலுக்காக பேசும் பேச்சுக்க ...

அரசியலுக்காக பேசும் பேச்சுக்கள் வலியை ஏற்படுத்துகிறது இந்தியாவை வளர்ந்த நாடாக்க பிரதமர் மோடி சபதம் ஏற்றுள்ளார். ...

கட்சியில் வாரிசுகள் இருக்கலாம ...

கட்சியில் வாரிசுகள் இருக்கலாம்.  கட்சியே வாரிசுகள் கையில் இருப்பது ஆபத்து லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களில் ...

எங்கள் குழந்தை ராமர் இனி கூடாரங ...

எங்கள் குழந்தை ராமர் இனி கூடாரங்களில் வசிக்க மாட்டார் ராமச்சந்திர மூர்த்திக்கு ஜெயம் உண்டாகட்டும் ராமச்சந்திர மூர்த்திக்கு ஜெயம் உண்டாகட்டும் வணக்கத்திற்குரிய ...

பாகுபாடு, திருப்தி படுத்தும், அ ...

பாகுபாடு,  திருப்தி படுத்தும், அரசியல் பிரச்சனைகளை வளர்த்தது நம்பாரதம் 1,500 ஆண்டுகளாக அன்னியரை எதிர்த்து போராடியது வரலாறு. ...

புனிதத்துவத்தை உணர்ந்த மனிதர்

புனிதத்துவத்தை உணர்ந்த மனிதர் இந்தமனிதன் நினைத்திருந்தால் நேரடியாக ஜனவரி 22 ஆம் தேதி ...

மருத்துவ செய்திகள்

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...

தொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)

டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ...

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...