புதுச்சேரியில் அமைச்சர்களும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களும் அடுத்தடுத்து ராஜினாமாசெய்து வருவதால், முதல்வர் நாராயணசாமி அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளநிலையில் கவர்னர் கிரண்பேடி விடுவிக்கப்பட்டு ,தெலுங்கானா கவர்னர் தமிழிசைக்கு கூடுதல்பொறுப்பு வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுச்சேரியில், முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்., ஆட்சி நடக்கிறது. இதில், சீனியர் அமைச்சராக பதவிவகித்த நமச்சிவாயம், காங்., – எம்எல்ஏ.,க்கள், தீப்பாய்ந்தான் சுகாதாரத் துறை அமைச்சராக பதவி வகித்த, மல்லாடி கிருஷ்ணாராவ், ஜான்குமார், ஆகியோரின் ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.இதையடுத்து, முதல்வர் நாராயண சாமி அரசு கவிழும்நிலையில் உள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் கிரண்பேடி புதுச்சேரிகவர்னர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, தெலுங்கானா கவர்னர் தமிழிசையிடம் கூடுதல்பொறுப்பு வழங்கப்பட்டதாகவும், இதுதொடர்பாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கும், கவர்னர் கிரண்பேடிக்கும் மோதல் தொடர்கதையாகி வருகிறது. கவர்னர் கிரண்பேடியை மாற்றவேண்டும் என கடந்த சில தினங்களுக்கு முன் டில்லி சென்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை முதல்வர் நாராயணசாமி சந்தித்து வலியுறுத்தினார். விரைவில் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் கிரண்பேடி கவர்னர்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ... |
ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ... |
பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ... |