சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையேற்றத்தால்தான் இந்தநிலை

இந்தியாவில் தற்போது பெட்ரோல்விலை உயர்வு மிகப்பெரிய பிரச்சினையாக எழுந்துள்ளது. தங்கத்தைவிட பெட்ரோல் விலைதான் அதிகமாக உயர்த்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான நகரங்களில் பெட்ரோல்விலை 100 ரூபாயைத் தாண்டியுள்ளதால் வாகனஓட்டிகள் பெரும் அதிருப்தியில் உள்ளனர் பெட்ரோலிய பொருட்கள் விலையேற்றத்துக்கு தாங்கள் காரணமில்லை என்று நரேந்திர மோடி சமீபத்தில் கூறினார்.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் கச்சாஎண்ணெய் இறக்குமதியைக் கட்டுப்படுத்த சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படாததால்தான் இப்போது இந்தநிலை ஏற்பட்டுள்ளதாக மோடி கூறியிருந்தார். அதேபோல, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், விரைவில் பெட்ரோல் விலையேற்றத்துக்கு தீர்வுகிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்தியாவில் பெட்ரோல் விலையேற்றத்துக்கு சர்வதேச கச்சா எண்ணெய்விலை நிலவரம்தான் காரணம் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சரான தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், “சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையேற்றத்தால்தான் இந்தநிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தொடர்ந்து கச்சா எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. கச்சா எண்ணெய்விநியோகம் இயல்பு நிலைக்குத் திரும்பியவுடன் இந்தியாவிலும் பெட்ரோலியப் பொருட்களின் விலை கட்டுக்குள் வரும். பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டுவருவது குறித்து கோரிக்கைகள் உள்ளன. இதுகுறித்த இறுதிமுடிவை ஜிஎஸ்டி கவுன்சில்தான் மேற்கொள்ளும். பெட்ரோல் விலையேற்றத்துக்கு மத்திய அரசை எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுவது முறையல்ல” என்றார்.

கொரோனா ஊரடங்கால் மத்திய அரசின் வரிவருவாய் குறைந்து செலவுகள் அதிகரித்ததையும் தர்மேந்திர பிரதான் சுட்டிக் காட்டினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணி ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல ஆசியபாரா விளையாட்டில் இந்தியாபெற்ற 111 பதக்கங்கள் என்பது சிறிய ...

தேசியக் கொடி அவமதிப்பு திமுக ம ...

தேசியக் கொடி அவமதிப்பு  திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு இந்திய தேசியக் கொடியை கொண்டு ...

மருத்துவ செய்திகள்

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...

தரைப்பசலையின் மருத்துவக் குணம்

தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ...

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...