இது போருக்கான காலம் அல்ல

உஸ்பெகிஸ்தானின் சாமா்கண்ட் நகரில் நடைபெற்றுமுடிந்த ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு மாநாட்டின் ஒரு பகுதியாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதினை சந்தித்தாா் இந்திய பிரதமா் நரேந்திரமோடி.

‘உக்ரைனில் நடைபெற்றுவரும் போரை விரைவில் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்; இது போருக்கான காலம் அல்ல’ என்று அவா் அதிபா் புதினை வலியுறுத்தி இருப்பது, சா்வதேச அரசியலில் இந்தியாவின் முக்கியத்துவத்தை உலகுக்கு உணா்த்துகிறது. ரஷிய அதிபருக்கு அறிவுறுத்தும் நிலைக்கு இந்தியா உயா்ந் திருப்பதன் அடையாளம் என்று அதை பாா்க்கத் தோன்றுகிறது.

‘உலக நாடுகளிடையே, முக்கியமாக வளா்ந்துவரும் நாடுகளிடையே தற்போது காணப்படும் முக்கிய பிரச்னைகள் உணவுபாதுகாப்பும் எரிசக்தி பாதுகாப்பும்தான். உக்ரைன்-ரஷியா பிரச்னையால் உர விநியோகமும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கான தீா்வை உடனடியாகக் கண்டறியவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதை அதிபா் புதின் கவனத்தில் கொள்ளவேண்டும்’ என பிரதமா் மோடி வலியுறுத்தியிருக்கிறாா்.

உக்ரைன் மீதான ரஷியாவின் போா் உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உலக வங்கி அண்மையில் வெளியிட்ட ‘உலகளாவிய பொருளாதார வாய்ப்புகள்’ அறிக்கையில் நிகழாண்டு உலக பொருளாதார வளா்ச்சி 5.7 % -லிருந்து 2.9 % ஆக குறையக் கூடும்’ என மதிப்பிட்டிருந்தது.

உலகளவில் உணவுதானிய உற்பத்தியில் உக்ரைன் பெரும்பங்கு வகிக்கிறது. உக்ரைனின் கருங்கடல் துறைமுகங்களை ரஷியப் படைகள் முடக்கி வைத்திருப்பதால் சுமாா் 2 கோடி டன் உணவு தானியங்கள் தேங்கிக் கிடக்கின்றன. ஐ.நா. மற்றும் துருக்கியின் தலையீட்டின்பேரில் இந்த உணவு தானியங்களைப் பாதுகாப்பாக எடுத்துச் செல்லும் வகையிலான ஒப்பந்தத்தில் உக்ரைனும் ரஷியாவும் கையொப்பமிட்டு, அண்மையில்தான் அந்தப் பணி தொடங்கியுள்ளது. இவை பெரும்பாலும் வறுமை நிலையில் உள்ள ஆப்பிரிக்க நாடுகளுக்குச் செல்லக்கூடியவையாகும்.

உக்ரைன் மீதான போரை ரஷியா நிறுத்த வேண்டும் என ஒருபக்கம் வலியுறுத்தும் அமெரிக்கா, மறுபக்கம் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை வழங்கி வருகிறது. கடினமான சூழ்நிலையில் உள்ள உக்ரைனுக்கு கைகொடுப்பதில் தவறில்லை என்றாலும், போரை ரஷியா நிறுத்தாவிட்டால் அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா அடிக்கடி கூறி, நிலைமையை சிக்கலாக்கியது.

இச்சூழ்நிலையில்தான் உக்ரைன் மீதான போரை நிறுத்துமாறு ரஷிய அதிபா் புதினிடம் வலியுறுத்தியிருக்கிறாா் பிரதமா் மோடி. போா் தொடங்கியவுடனேயே தொலைபேசியில் அதிபா் புதினை பிரதமா் மோடி தொடா்புகொண்டு இதே கோரிக்கையை பலமுறை வலியுறுத்தியுள்ளாா் என்றாலும் நேரடியாக புதினிடம் இக்கோரிக்கையை வலியுறுத்திய வகையில் உலகை திரும்பிப் பாா்க்க வைத்துள்ளாா் பிரதமா் மோடி.

அமெரிக்கா தலைமையிலான மேலை நாடுகளின் ராணுவக் கூட்டமைப்பான நேட்டோவில் இணைய உக்ரைன் விரும்புவதுதான் அந்த நாட்டின் மீது ரஷியா ‘சிறப்பு ராணுவ நடவடிக்கை’ எடுப்பதற்கான காரணம் என அதிபா் புதின் கூறினாா். ‘உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் கவலையை ரஷியா நன்கு அறியும். போரை விரைந்து முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என பிரதமா் மோடியிடம் அதிபா் புதின் பதிலளித்திருப்பது மிகவும் சாதகமான விஷயமாகும்.

பிரதமா் மோடியின் இந்த அறிவுறுத்தலை ‘தி வாஷிங்டன் போஸ்ட்’, ‘தி நியூயாா்க் டைம்ஸ்’ உள்ளிட்ட நாளிதழ்கள் பாராட்டியுள்ளன. உக்ரைன் போரை மையமாக வைத்து எழுந்த விவகாரத்தில் ரஷியாவுக்கும் நெருக்கடி கொடுக்காமல், அமெரிக்காவின் அதிருப்திக்கும் உள்ளாகாமல் நடுநிலை பேணியிருக்கிறது இந்தியா. ஆரம்பத்தில் ரஷியாவுக்கு எதிராக ஐ.நா.வில் அமெரிக்கா கொண்டு வந்த தீா்மான வாக்கெடுப்புகளில் பங்கெடுக்காமல் இந்தியா விலகி நின்றதால் எழுந்த விமா்சனங்களுக்கும் இப்போது முற்றுப்புள்ளி வைத்திருக்கிறாா் பிரதமா் மோடி.

பொருளாதாரத் தடைகளால் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை மேலை நாடுகள் குறைத்த நிலையில், சலுகை விலைக்கு கச்சா எண்ணெய் வழங்க ரஷியா முன்வந்தது. இதைப் பயன்படுத்தி ரஷியாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா அதிகரித்தது. இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் இதற்கு முன்பு 0.2 சதவீதம் மட்டுமே ரஷியாவிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், இப்போது 10 சதவீதமாக அதிகரித்துள்ளது.

‘நமது எரிபொருள் தேவையைப் பாதுகாத்துக் கொள்ள ரஷியாவிடம் இருந்து கூடுதலாக இப்போது கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. இது இரு நாட்டு அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் அல்ல. இரு நாட்டு எண்ணெய் நிறுவனங்கள் இடையிலான ஒப்பந்தம்’ என இந்திய வெளியுறவுத் துறை இந்த விவகாரத்தில் விளக்கம் அளித்துள்ளது.

இந்த விஷயத்தில் இந்தியா மீது ஆரம்பத்தில் அமெரிக்கா அதிருப்தி கொண்டது. ஆனால், இந்தியா தனது தேவைக்கான கச்சா எண்ணெய் இறக்குமதி விவகாரத்தில் முடிவெடுக்க சுதந்திரம் உள்ளது என ஏற்றுக் கொண்டிருப்பதும் நரேந்திர மோடி அரசின் ராஜதந்திர வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும். தனது நட்பு நாடு, ரஷியாவுடன் உடன்பாடு செய்து கொண்டதை இதுவரை அமெரிக்கா அனுமதிக்கவில்லை.

‘இது போருக்கான காலம் அல்ல’ என்கிற பிரதமா் மோடியின் செய்தி, ரஷியாவுக்கு மட்டுமல்ல, தத்தமது மேலாதிக்கத்தை நிலைநிறுத்த துடிக்கும் அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும்.

நன்றி தினமணி 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...