”பெட்ரோல், டீசல் உள்ளிட்ட படிம எரிபொருட்களுக்கான கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்காமல், சுற்றுச்சூழல் மாசு பிரச்னையை தீர்க்க முடியாது,” என, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
டில்லியில், நிகழ்ச்சி ஒன்றில் நேற்று அவர் பேசியதாவது: உயிரி எரிபொருள் பொருளாதாரம் தற்போது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியாவில் அது நல்ல நிலையில் உள்ளது. நாட்டின் மொத்த காற்று மாசில், 40 சதவீதம் வாகனப் போக்குவரத்தால் ஏற்படுகிறது.
காற்று மாசு பெரும் பிரச்னையாக மாறி வரும் சூழலில், கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்காமல் காற்று மாசை குறைக்க முடியாது. பெட்ரோல், டீசலுக்கு மாற்றான எரிபொருளை நாம் நாட வேண்டியுள்ளது. பஞ்சாப், ஹரியானா, மஹாராஷ்டிராவில், வைக்கோலில் இருந்து உயிரி இயற்கை எரிவாயு தயாரிக்கும், 400 திட்டங்கள் செயல்படுகின்றன. ஐந்து லட்சம் கோடி டாலர் பொருளாதார நாடாக இந்தியாவை வளர்ச்சி பெறச் செய்ய, பிரதமர் மோடி இலக்குடன் செயல்படுகிறார். இந்தியாவை உலகின் வாகனத்துறை மையமாக மாற்றுவதும் அவரது கனவாகும். இவ்வாறு கட்கரி பேசினார்.
காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது. |
புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம். |
இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ... |