மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா காரைக்கால் வரும்போது, முன்னாள் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணையவாய்ப்புள்ளது என புதுச்சேரி மாநிலப் பாஜக துணைத் தலைவர் வி.கே.கணபதி கூறியுள்ளார்.
மத்திய உள்துறைஅமைச்சர் அமித்ஷா வரும் 28-ம் தேதி காரைக்கால் வர உள்ளதாகவும், காரைக்கால் சந்தைத்திடலில் நடக்கவுள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசவுள்ளதாகவும் பாஜக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சந்தைத்திடலில் பொதுக் கூட்டத்துக்கான பந்தல் அமைக்கும் பணிகள் இன்று (பிப்.24) தொடங்கப்பட்டன. இதற்காகப் பந்தல் கால்கோள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புதுச்சேரி மாநில பாஜக துணைத்தலைவர் வி.கே.கணபதி, காரைக்கால் மாவட்டத் தலைவர் ஜெ.துரை சேனாதிபதி உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் வி.கே.கணபதி செய்தியாளர்களிடம் கூறும்போது, ”மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கான அனுமதி பெறப்பட்டுவிட்டது. காரைக்காலில் இதுவரை இல்லாத வகையிலான மிக பிரம்மாண்டமான பொதுக் கூட்டமாக இது இருக்கும். அதன் பிறகு காரைக்காலின் சரித்திரமும் மாறும் என்று நம்புகிறோம்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏக்கள், முன்னாள் எம்எல்ஏக்களின் வாரிசுகள் உள்ளிட்ட நிறையப்பிரமுகர்கள் கட்சியில் இணையக்கூடிய வாய்ப்புகள் உள்ளன” என்று தெரிவித்தார்.
நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது எலும்பு மஜ்ஜை ... |
காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ... |
சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ... |