பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்

டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசிக்கான முதற்கட்ட தடுப்பூசியை இன்றுகாலை டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் போட்டுக் கொண்டார். தகுதியான அனைவரும் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மோடி நாட்டு மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்தியாவை கொரோனா இல்லாத நாடாக மாற்றவேண்டும் என்று மேலும் கேட்டுக் கொண்டார். கொரோனா இல்லாத உலகை உருவாக்க மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பணி மகத்தானது என்று மோடி புகழாரம்சூட்டினார். பிரதமர் மோடிக்கு புதுச்சேரியைச் சேர்ந்த செவிலியர் நிவேதா கொரோனா தடுப்பூசி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுயமாக பதிவு செய்வதற்காக மத்திய அரசின் கோ-வின், ஆரோக்கியசேது செயலிகளில் மாற்றம் செய்துள்ளனர்.பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி போட இந்தமுகவரி இணையதளத்தில் சென்று பதிவு செய்ய வேண்டும். https://www.cowin.gov.in/home.

நாடு முழுவதும் 7900-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளமுடியும். தேர்வு செய்யப்பட்ட தனியார் மருத்துவமனைகள் தவிர அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கோவிட் தடுப்பூசி போட்டு கொள்ளலாம்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அடுத்த ஆண்டில் நான்மீண்டும் வர ...

அடுத்த ஆண்டில் நான்மீண்டும் வருவேன் வளர்ச்சிக்கு ஆர்வமுள்ள வட்டாரங்கள் என்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் ...

காந்தி ஜெயந்தியையொட்டி தூய்மை ...

காந்தி ஜெயந்தியையொட்டி தூய்மைப் பணியில் ஈடுபட்ட மோடி காந்தி ஜெயந்தியையொட்டி பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித் ...

பேச்சுசுதந்திரம் குறித்து யார ...

பேச்சுசுதந்திரம் குறித்து யாரும் எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம் “கனடாவில் இந்திய துாதரக அதிகாரிகள் மிரட்டப்படுவதால், அவர்களுக்கு மிகப்பெரிய ...

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங் ...

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்டது பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் நேற்று ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது தாக்குதல் சுவாமி விவேகானந்தர், லோக்மான்ய திலகருக்கு உத்வேகம்அளித்த சனாதன தர்மத்தை ...

யாத்திரையை திசை திருப்பும் திம ...

யாத்திரையை  திசை திருப்பும் திமுக தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலையின் "என் மண், என் ...

மருத்துவ செய்திகள்

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...