பிரதமர் நரேந்திரமோடி என்றைக்குமே தனது சுயத்தை மறைத்ததில்லை. அவருடைய இந்தப்பண்பை நான் பாராட்டுகிறேன் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத் பேசியுள்ளார்.
ஜம்முகாஷ்மீரில் ஞாயிற்றுக்கிழமை பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட குலாம் நபி ஆசாத் இவ்வாறு பேசினார்.
முன்னதாக சனிக் கிழமையன்று ஜி-23 என்ற தலைப்பில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ஜம்மு-காஷ்மீரில் ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். அந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைமை குறித்து பல்வேறு கேள்விகளை அவர்கள் எழுப்பினர். இந்நிலையில், குலாம்நபி ஆசாத்தின் பேச்சு அதீத முக்கியத்துவம் பெறுகிறது.
அவர் பேசியதாவது:
“நம் தேசத்தின் தலைவர்கள் பலரிடம் பலநல்ல விஷயங்களை நான் கண்டு ரசித்திருக்கிறேன். சிலவற்றை பின்பற்றியிருக்கிறேன். நான் ஒருகிராமத்தைச் சேர்ந்தவர். அதில் எனக்கு எப்போதுமே பெருமை. அதேபோல், நமது பிரதமர் மோடி போன்றோரை நான் என்றைக்குமே பெருமையுடன் பார்க்கிறேன். ஒருகிராமத்தில் தேநீர் விற்றுக் கொண்டிருந்தவர் பிரதமரானார். ஆனால் அவர் அதை என்றுமே மறைத்ததில்லை. நாங்கள் அரசியல் சித்தாந்த ரீதியாக எதிரிகளாக இருக்கலாம்.
ஆனால், அவரது சுயத்தை மறைக்காத பண்பை நான்வெகுவாக பாராட்டுகிறேன். ஆனால், சில அரசியல்வாதிகள் மாயையில் வாழ்கின்றனர். ஒருமனிதர் எபோதும் அவரது சுயத்தை சிலாகிக்க வேண்டும். நான் பலநாடுகளுக்கு பயனப் பட்டிருக்கிறேன். 5 நட்சத்திர, 7 நட்சத்திர விடுதிகளில் தங்கியிருக்கிறேன். ஆனால், என் சொந்த கிராமத்தில் என் மக்களுடன் நான் இருக்கும் போது தனித்துவமாக உணர்கிறேன்” எனப் பேசினார்.
குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ... |
குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது. |
அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ... |