ஒரே பதவி ஒரே பென்சன் திட்டம் குறித்து ராணுவ வீரர்களிடம் காங்கிரஸ் பொய் கூறுகிறது பிரதமர் மோடி பேச்சு

” ஒரே பதவி, ஒரே பென்சன் திட்டம் குறித்து ராணுவ வீரர்களிடம் காங்கிரஸ் பொய் சொன்னது,” என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ஜம்முவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சியின் ஆட்சியால் மக்கள் சோர்வடைந்து விட்டனர். அவர்கள் ஆட்சியில் நிலவிய ஊழல், வேலைவாய்ப்பில் பாகுபாடு ஆகியன தொடர்வதை மக்கள் விரும்பவில்லை. இனியும் பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதம் நிலவுவதையும் அவர்கள் விரும்பவில்லை. அமைதி, குழந்தைகளுக்கு சிறந்த எதிர்காலம் ஆகியவற்றை விரும்புகின்றனர். இதற்காக பா.ஜ., ஆட்சி வர வேண்டும் என காஷ்மீர் மக்கள் விரும்புகின்றனர்.

கடந்த இரு கட்ட தேர்தலில் பதிவான ஓட்டுகள் மக்களின் மனநிலையை காட்டுகின்றன. அதில் பா.ஜ.,வுக்கு ஆதரவாக அதிக ஓட்டுகள் பதிவாகி உள்ளது. முழு மெஜாரிட்டியுடன் பா.ஜ., ஆட்சி அமைக்கும்.

நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தவர்களை ஒரு போதும் காங்கிரஸ் மதித்தது கிடையாது. அக்கட்சி தான், ஒரே பதவி ஒரே பென்சன் திட்டத்திற்காக ராணுவ வீரர்களை நான்கு தசாப்தங்களாக காக்க வைத்தது. இத்திட்டத்தால், அரசு கருவூலம் காலியாகும் என ராணுவ வீரர்களிடம் காங்கிரஸ் பொய் சொன்னது. ஆனால், நான் ராணுவ வீரர்களின் குடும்பங்களின் நலனை விட அரசு கருவூலத்தை நான் பெரிதாக பார்க்கவில்லை.

குண்டு சத்தம் கேட்ட போது எல்லாம் காங்கிரஸ் வெள்ளை கொடி காட்டியதை மறக்கக்கூடாது. துப்பாக்கிகளுக்கு குண்டுகள் மூலம் பா.ஜ., ஆட்சியில் பதிலடி கொடுக்கப்பட்ட போது தான், எதிர்புறத்தில் இருந்தவர்களுக்கு உணர்வு வந்தது. 2016 ம் ஆண்டு செப்.,28 அன்று தான் இந்தியா சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தியது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவ ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவதை மக்கள் விரும்ப வில்லை பிஹார் சட்டப் பேரவைத்தேர்தலை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது ப ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது போல் இருக்கிறது பிரதமரின் பயிர்காப்பீடு திட்டத்தின் செயல்பாடு குறித்து மத்திய வேளாண் ...

உங்​களின் தந்​தை​ பெயரை சொல்ல ...

உங்​களின் தந்​தை​ பெயரை சொல்ல  வெட்​கப்​ படு​கிறீர்​களா ? பிஹாரின் தேர்​தல் பிரச்​சார சுவரொட்​டிகளில் இந்த மாநிலத்​தில் காட்​டாட்​சிக்கு ...

சாத் பண்டிகைக்கு யுனெஸ்கோ அங்க ...

சாத் பண்டிகைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் பெற முயற்சிக்கிறோம் பீஹார்தேர்தலில் ஓட்டுக்களை பெறுவதற்காக, காங்கிரஸ், ஆர்ஜேடி தலைவர்கள் என்னை ...

மருத்துவ செய்திகள்

பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ...

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...