கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிமுக கூட்டணியில் நாகர்கோவில், குளச்சல், விளவங்கோடு ஆகிய 3 தொகுதிகள் பாஜக வுக்கு ஒதுக்கப் பட்டுள்ளன. இதில் நாகர்கோவில், குளச்சல் தொகுதிகளுக்கு நேற்று வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். நாகர்கோவில் தொகுதிக்கு பாஜக மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளார். சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேல் அரசியல் அனுபவம்பெற்றவர். திருமணமாகவில்லை. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் தற்போதைய எம்எல்ஏ சுரேஷ்ராஜனை எதிர்த்து போட்டியிட்டார். அந்ததேர்தலில் பாஜக தனித்து நின்று 46,413 வாக்குகள் பெற்றிருந்தார். தற்போது பாஜக மாநில துணைத்தலைவராக உள்ளார்.
குளச்சல் தொகுதியில் பாஜக வேட்பாளராக குமரிரமேஷ் மீண்டும் போட்டியிடுகிறார். இவர் கடந்ததேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரின்ஸை எதிர்த்து இதேதொகுதியில் போட்டியிட்டு 41,169 வாக்குகள் பெற்றிருந்தார். சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டுவெடிப்பில் மரணமடைந்த குமரி பாலனின் சகோதரரான இவர், தக்கலை அருகே உள்ள பிரமபுரத்தை சேர்ந்தவர். பாஜகவின் விளவங்கோடு தொகுதிவேட்பாளர் பெயர் அடுத்தகட்ட பட்டியலில் வெளி யாகவுள்ளது.
பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ... |
தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ... |