‘நாட்டின் கிழக்கு பகுதி யின் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை, மத்திய அரசு எடுத்து வருகிறது. இந்த பகுதியின் வளர்ச்சிக்கு, கோல்கட்டா தலைமை வகிக்கும்,” என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
ஒடிசா மாநிலத்தின் முதல் முதல்வர் ஹரே கிருஷ்ண மஹதாப், எழுதிய, ‘ஓடிசா இதிஹாஸ்’ என்ற புத்தகத்தின் ஹிந்தி மொழியாக்க பதிப்பை, பிரதமர் மோடி, வெளியிட்டார். ‘வீடியோ கான்பரன்ஸ்’ வழியாக நடந்த இந்நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது:
நம் நாட்டில், இயற்கை வளங்கள் நிறைந்த பகுதி எது என்றால், அது கிழக்கு பகுதி தான், மேற்கு வங்கம், அசாம் ஒடிசா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தான், இயற்கை மற்றும் மனித வளங்கள் அதிகமாக உள்ளன. கிழக்கு பகுதி தலைமை வகித்த போது தான், பாரதத்தின் பொற்காலமாக இருந்தது என்பது வரலாற்றுப் பூர்வமான உண்மை.
ஆனால், தற்போது வளர்ச்சியில் கிழக்கு பகுதி பின் தங்கியுள்ளது. மேற்கு பகுதிக்கு இணையாக, கிழக்கு பகுதியிலும் வளர்ச்சி ஏற்படுத்த, மத்திய அரசு அதிக நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, தொழில்வளத்தை பெருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு, துடிப்பான கோல்கட்டா தலைமை வகிக்கும். அதற்கான நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. ஓடிசாவின் முதல் காங்கிரஸ் முதல்வராக பதவியேற்ற மஹதாப், அதே கட்சியை எதிர்த்து, 1975ல், ஜனநாயகத்தை காக்க போராடினார். இவ்வாறு அவர் பேசினார்.
1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ... |
1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ... |
வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ... |
1founded