மக்களை தூண்டியதற்காக மம்தாபானர்ஜி மீது வழக்குத்தொடர வேண்டும்

தேர்தல் பணியில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினருக்கு எதிராக மக்களை தூண்டியதற்காக மம்தாபானர்ஜி மீது வழக்குத்தொடர வேண்டும் என்று மேற்குவங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் கூறியுள்ளார்.

மேற்கு வங்கமாநிலத்தில் 4-வது கட்டமாக 44 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது கூச்பிகார் மாவட்டத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் திடீரென வன்முறை மூண்டதால் சி.ஐ.எஸ்.எஃப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள்.

இதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உள்ளூர்மக்கள் மத்திய தொழில்பாதுகாப்பு படையினரை (சி.ஐ.எஸ்.எஃப்) தாக்கியதால், சிஐஎஸ்எஃப் படையினர் வேறுவழியின்றி வன் முறையில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது.

சி.ஐ.எஸ்.எஃப் படையினர் மத்திய அரசின்சொல் கேட்டு மக்களை சுட்டதாகவும், இதற்கு பொறுப்பேற்று அமித்ஷா பதவி விலகவேண்டும் என்றும் மம்தா பானர்ஜி கூறினார் இந்த நிலையில் தேர்தல் பணியில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினருக்கு எதிராக மக்களைத் தூண்டியதற்காக மம்தாபானர்ஜி மீது வழக்குத் தொடர வேண்டும் என்று மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘ தூசு செலே’ (கெட்ட பையன்கள்) எங்கிருந்து வந்தார்கள்?இவர்கள் வங்காளத்தில் தொடர்ந்து இருக்கமாட்டார்கள். இது ஒரு ஆரம்பம் மட்டுமே. சிஐஎஸ்எஃப் துப்பாக்கிகளை நிகழ்ச்சிக்காக மட்டுமே எடுத்துச்செல்கிறது என்று தவறாக நினைக்கிறார்கள்.யாராவது சட்டத்தை தனதுகைகளில் எடுத்துக் கொண்டால், அவருக்கு பொருத்தமான பதில்கிடைக்கும். மத்திய படைகள் வாக்குச்சாவடிகளில் நிறுத்தப்படும், அவர்களை அச்சுறுத்த யாரும் அனுமதிக்கப் பட மாட்டார்கள். இன்னும் பல்வேறு இடங்களில் கூச்பிகார் போன்ற சம்பவங்கள் அதிகமாக நடக்கும். எனவே எச்சரிக்கையாக இருங்கள் என்று திலீப்கோஷ் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங் ...

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்டது பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் நேற்று ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது தாக்குதல் சுவாமி விவேகானந்தர், லோக்மான்ய திலகருக்கு உத்வேகம்அளித்த சனாதன தர்மத்தை ...

யாத்திரையை திசை திருப்பும் திம ...

யாத்திரையை  திசை திருப்பும் திமுக தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலையின் "என் மண், என் ...

ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்த ...

ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்து. அவரைவைத்து அரசியல் செய்யக்கூடாது ...

மோடியின் மேக் இன் இந்தியா சிறப் ...

மோடியின் மேக் இன் இந்தியா சிறப்பு; மோடி பாராட்டு இந்திய பிரதமர், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற ஒரு செயல்திட்டத்தை ...

சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்க ...

சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் நாட்டில் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...

உடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்

சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...