நாடு மிகப்பெரும் அவலத்தில் இருக்கையில் மீண்டும் அசத்தி உள்ளது நம் டி.ஆர்.டி.ஓ. (DRDO), தற்போது டாக்டர் ‘ரெட்டீஸ் லெபாரட்டரி’யுடன் இணைந்து பவுடர் வடிவில் தண்ணீரில் கலந்து குடிக்கும் மருந்தினை வெற்றிகரமாக அது தயாரித்து அளித்துள்ளது. இந்த மருந்தினை தற்போது கொரானா நோயாளிகளுக்கு பரிசோதனை முறையில் அளித்திட, அவர்கள் வெகு விரைவில் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மேலும் ஆக்ஸிஜனுக்கு வெண்டிலேட்டரின் உதவியை நாடுவதையும் இது விரைவில் சரியாக்கி குணப்படுத்துகிறது.
இந்திய பாதுகாப்புத் துறை வெளியிட்ட அறிக்கையில், இந்த மருந்து பாதிக்கப்பட்ட செல்களை குணப்படுத்தி, சீரமைக்கிறது என்கிறது.இந்த மருந்து 2-டியாக்ஸி D-குளுக்கோஸ் (2-DG) என்று அழைக்கப்படுகிறது. இதன் உருவாக்கத்தில் இந்திய ‘நியூக்ளியர் & அலைட் சயின்ஸஸ்’ எனும் டி.ஆர்.டி.ஓ. உடைய தில்லி பரிசோதனை மையம் முக்கிய பங்காற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மருந்துக்கு இனி இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலக அளவில் பெரும் தேவை இருக்கும் என்கிறார்கள்.இந்தியர்களால் இயலாதது யாரால் இயலும் ? உலகத் தலைவன் ஆட்சியில் விரைவில் கொரானாவுக்கு பாடை கட்டுவோம். உலகத்திற்கு வழிகாட்டுவோம்.
பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ... |
அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது. |
பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ... |