மேற்கு வங்கத்தில் தோ்தலுக்கு பிந்தைய வன்முறையில் பெண்கள்தாக்குதலுக்கு உள்ளானது தொடா்பான குற்றச்சாட்டுகுறித்து மாநில டி.ஜி.பி. மே 31-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று தேசிய மகளிா் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸுக்கும், பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இதில் திரிணமூல்காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்று, தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தது. பாஜக அதிக இடங்களில்வென்று பிரதான எதிா்க்கட்சியாக உருவெடுத்தது.
தோ்தல் முடிவுகளுக்குப் பிறகு, பாஜக அலுவலகங்கள் சிலஇடங்களில் தாக்குதலுக்கு உள்ளாகின. 20-க்கும் மேற்பட்ட பாஜக தொண்டா்கள் கொல்லப்பட்டனர் பல இடங்களில் பெண்களும் வன்முறையின் போது தாக்குதலுக்கு உள்ளானாா்கள். இதில் போலீஸாரும் பெண்களுக்கு எதிராக அடக்குமுறைகளில் ஈடுபட்டதாக தெரியவந்தது.
இந்த விவகாரம் தொடா்பாக தேசியமகளிா் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக் குழு அமைத்தது. அந்தக் குழுவினா் மேற்கு வங்கத்தில் நேரில்சென்று ஆய்வு நடத்தினா். அப்போது மாநில அரசும், காவல் துறையும் பெண்களை வன்முறையில் இருந்து காக்க உரியநடவடிக்கை எடுக்கவில்லை என்பது தெரியவந்தது. இதுதொடா்பாக ஆய்வுக் குழுவினா் விரைவில் இறுதி அறிக்கை தாக்கல்செய்ய உள்ள நிலையில், மாநில டி.ஜி.பி.க்கு தேசிய மகளிா் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் மே 31-ம் தேதி ஆணையத்தின் முன்பு நேரில்ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட வாரியாக பெண்களுக்கு எதிராக நடந்த வன்முறை தொடா்பான விவரத்தையும் சமா்ப்பிக்க வேண்டும்; இதுதொடா்பாக காவல் துறை தரப்பில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையும் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது. |
பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ... |