நம்பும்படியாக இல்லை இவர்கள் அனைத்தையும் நேர்மையாகதான் அணுகுகிறார்கள் என்பதை

யூடியூபர் கிஷோர் கே. சாமி பெரியார், அண்ணா, கலைஞர் போன்றோரை அவதூறாக பேசியதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அவதூறாக அருவருக்க தக்க வகையில் பேசியிருந்தால் சட்டம் அதன் கடமையை செய்வதை யாரும் தடுக்கப்போவது இல்லை.

அதே நேரத்தில் ஆளும் திமுக.,வுக்கு எதிராக பேசுபவர்களை, தங்களது தகிடு தக்கங்களை புட்டு புட்டு வைப்பவர்களை எல்லாம் களையெடுக்கும் எண்ணம் இருந்தால் அது கண்டிக்க தக்கது. அதே சட்டம் அவர்கள் பக்கம் திரும்பவும் வல்லது.

திமுக நியாயம் தர்மத்துடன்தான் செயல்படுகிறது என்பதை யாரும் இங்கு நம்ப தயாரில்லை. அப்படி இருந்திருந்தால் பிரதமர் மீது மிகவும் இழிவான விமர்சனங்களை, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை  வைக்கும் கூட்டங்களை அதிகம் கொண்ட மாநிலமான தமிழகத்தில். இந்நேரம் வழக்குகள் மட்டுமே சிலாயிரங்களை கடந்திருக்க வேண்டும், கைதுகள் மட்டும் சில நூறுகளில் அடங்கியிருக்கவும் வேண்டும் அப்படி ஒன்றும் நடந்திடவில்லையே.

தேர்தல் சமயத்தில் திமுக.,வின் இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் “பிரதமர் நரேந்திர மோடியின் சித்ரவதையால் தான் அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட பாஜக தலைவர்கள்  உயிரிழந்தனர்” என்று அவதூறு பரப்பவில்லையா?.

“உதயநிதி ஜி தயவு செய்து உங்கள் பிரசாரத்தின்போது எனது தாய் குறித்து எதுவும் பேச வேண்டாம்! நீங்கள் சொன்னது அனைத்துமே பொய். பிரதமர் நரேந்திர மோடி ஜி என் தாயார் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார். எங்கள் வாழ்வின் கடினமான நேரங்களில், பிரதமரும் கட்சியும்தான் துணையாக நின்றனர். உங்களின் பேச்சு எங்களைக் காயப்படுத்திவிட்டது” சுஷ்மா ஸ்வராஜ் மகள் பன்சூரி ஸ்வராஜ்.

“உதயநிதி ஸ்டாலின் ஜி, உங்களுக்குத் தேர்தல் குறித்த அழுத்தம் இருப்பது எனக்குத் தெரியும். ஆனால், நீங்கள் பொய் சொல்லும் போதும், என் அப்பாவின் நினைவுகளை மதிக்காமல் பேசும் போதும் நான் அமைதியாக இருக்க முடியாது. என் அப்பா அருண் ஜெட்லியும், பிரதமர் மோடியும் அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பைப் பகிர்ந்து கொண்டனர். அத்தகைய நட்பைத் தெரிந்துகொள்ளும் அளவுக்கு நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருக்க வேண்டுமென நான் பிரார்த்திக்கிறேன்”‘ அருண் ஜெட்லியின் மகள் சோனாலி ஜெட்லி.

அப்போது யாரும் அவசரப்பட்டு வழக்கு தொடுத்திட வில்லையே?. ஆனால் இந்த ஆட்சி தொடுக்கும் வழக்குகள் எல்லாம் அவர்களது கட்சி குடும்பத்தை சுற்றியதாகவே இருக்கிறதே.நம்பும்படியாக இல்லை இவர்கள் அனைத்தையும் நேர்மையாகதான் அணுகுகிறார்கள் என்பதை.

நன்றி தமிழ்தாமரை VM வெங்கடேஷ் 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...