‘‘கிழக்கிந்தியாவை உலோகத்தொழில் தொடர்பான உற்பத்தி மையமாக ஆக்குதல்’’ என்ற தலைப்பிலான இணைய கருத்தரங்கை இந்திய உலோகங்கள் மையம்நடத்தியது.
இதில் உலோகத் துறை நிபுணர்கள், எஃகு அமைச்சக அதிகாரிகள், மாநில அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்துகொண்டு பேசியதாவது:
கிழக்கு இந்தியாவை, நாட்டின் மற்ற வளர்ச்சியடைந்த பகுதிகளுக்கு இணையாக கொண்டுவரும் நோக்கத்துடன் பிரதமர் நரேந்திர மோடி பணியாற்றிவருகிறார். திறமையான வேலையாட்கள், அபரிமிதமான இயற்கை வளங்கள், ஆசையுள்ள மக்கள் உள்ளதால், தொழில் நுட்பத்துடன் கூடிய உற்பத்தி சூழலை உருவாக்க கிழக்கு இந்தியா தயாராகஉள்ளது. சிலநாடுகளில் மட்டுமே, கிழக்கு இந்தியாவில் உள்ளதுபோல அபரிமிதமான இயற்கை வளங்கள் உள்ளன.
எஃகு துறையில் தொடங்கப்பட்ட பூர்வோதையா திட்டம் கிழக்கிந்தியாவில் புதிய வளர்ச்சியுகத்தை ஏற்படுத்தக் கூடியது. கிழக்கிந்தியாவில் உள்நாட்டு நீர்போக்குவரத்து வழிகள் உட்பட பல கட்டமைப்புகளை மேம்படுத்த மத்தியஅரசு முயற்சிகள் மேற்கொள்கிறது. கிழக்கிந்தியா வளமான கட்டிடக்கலை, கடல்சார் பொருளாதாரம், தொழில்வளர்ச்சியை கொண்டிருந்தது. அந்த பெருமையை மீட்டெடுக்கும் நேரம் வந்துள்ளது.
வளர்ச்சியும், சூழலியலும் ஒன்றாக இருக்கமுடியும். உலகம் பசுமையான எதிர்காலத்தை நோக்கி செல்ல பிரதமர் நரேந்திர மோடி வழிகாட்டுகிறார். தொழில்வளர்ச்சி, நீடித்த வளர்ச்சி மற்றும் கொள்கைகள் ஆகியவை மக்களுக்கும், வர்த்தகத்துக்கும், சுற்றுச் சூழலுக்கும் சாதகமாக இருக்கும் வகையில் அரசு கொண்டு செல்லவேண்டும்.
பசுமையான, சுத்தமான முறையில் எஃகுதயாரிப்பை மேற்கொள்ள இந்திய உலோகமையம் உதவ வேணடும். தொழில்புரட்சி 4.0-வுக்கு, புதுமையான மற்றும் நிலையான தொழில்மாதிரிகளை நாம் உருவாக்க வேண்டும்.
இவ்வாறு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசினார்.
பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ... |
நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ... |
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |