மூன்றாம் அலை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, ஒடிசா, மகாராஷ்டிரா, கேரளா ஆகிய 6 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திரமோடி கலந்துரையாடினார். காணொலி மூலம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, தங்களது மாநிலங்களில் மேற்கொள்ளப் படும் நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தனர்.

இதனை தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திரமோடி, இந்த 6 மாநிலங்களில் மட்டும் 80 சதவீத கொரோனா பாதிப்புகளும், 84 சதவீத உயிரிழப்புகளும் ஏற்படுவதாக குறிப்பிட்டார். கொரோனா பரவல் குறைந்துள்ள போதிலும், சில மாநிலங்களில் கொரோனா எண்ணிக்கை அதிகரிப்பது கவலை அளிப்பதாக தெரிவித்தார்.

குறிப்பாக, கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் பரவல் எண்ணிக்கை அதிகரித்துவருவது கவலை அளிப்பதாக நரேந்திர மோடி தெரிவித்தார். இரண்டாவது அலைக்கு முன்னதாக ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் இதேநிலை இருந்ததால், மூன்றாவது அலை ஏற்படாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

கொரோனா பரவல் எண்ணிக்கை நீண்டகாலத்துக்கு அதிகரித்து இருந்தால், கொரோனா உருமாற்றம் பெறவும், புதிய வகை வைரஸ்கள் உருவாகவும் அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார். எனவே, பரிசோதனை, கண்காணிப்பு, சிகிச்சை மற்றும் தடுப்பூசி போடுவது ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.

குழந்தைகளுக்கு கொரோனா தொற்று பரவாமல் இருக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். கொரோனா பரவல் முடிந்துவிடவில்லை என்றும், ஊரடங்கு தளர்வுக்குப் பிந்தைய நிலவரங்கள் மிகவும் கவலை அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார். மக்கள் கூடுவதைத் தடுக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

பித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)

பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ...

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...