அன்பையும் தியாகத்தையும் வெளிக் காட்டும் விழா பக்ரீத். இஸ்லாமியர்களின் மிகமுக்கியமான பண்டிகைகளில் பக்ரீத்திருநாளும் ஒன்று. இறைவனின் தூதரான இப்ராகீம் நபிகளார் தனதுமகன் நபி இஸ்மாயிலுக்கு பதிலாக ஆட்டை பலி கொடுத்ததை நினைவு கூறும் வகையிலும், அவரின் தியாகத்தை போற்றும் வகையில் ஈகை திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த விழா ஹஜ்பெருநாள் என்றும் அழைக்கப்படுகின்றது.
கொரோனா காலம் என்பதால் போதிய சமூகஇடைவெளியுடன் நாடுமுழுக்க பல்வேறு மசூதிகளில் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டனர். ஈகை திருநாள் என்று அழைக்கப்படும் பக்ரீத்திருநாள் பகிர்ந்து அளிக்கும் பண்பை போதிக்கும் நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது. தங்களிடம் உள்ள உணவையும், பொருளையும் பகிர்ந்து அளிக்கும் தினமாகும் இது.
இந்நிலையில் நாட்டுமக்கள் அனைவருக்கும் பக்ரீத் பண்டிகை தினவாழ்த்துக்களை பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “ஈத் முபாரக்! ஈத்-உல்-ஆதாவுக்கு வாழ்த்துக்கள். அதிகநன்மைக்கான சேவையில் நல்லிணக்கம் மற்றும் உள்ளடக்கத்தை கொண்டு, இந்தநாள் கூட்டு பிரார்த்தனைகளின் உணர்வை மேலும் அதிகரிக்கட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ... |
உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ... |
இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ... |