ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவுகூறுகிறேன்

கார்கில் போரின் வெற்றிதினமான இன்று, பிரதமர் நரேந்திர மோடி, ராணுவ வீரர்களை நினைவு கூர்ந்துள்ளார். இந்தியாவின் கார்கில்பகுதிக்குள் கடந்த 1999-ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவத்தின் ஆதரவுடன் பயங்கர வாதிகள் ஊடுருவினர். இதையடுத்து கார்கில் பகுதியிலிருந்து பாகிஸ்தான் பயங்கரவாதிகளை விரட்டியடிக்க இந்தியா தயாரானது. அந்தபோர் திட்டத்துக்கு ஆப்ரேஷன் `விஜய்’ என்று பெயரிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கார்கில் லடாக்பகுதியில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடுமையான போர் நடந்தது. உயரமான மலைத் தொடர்களில் மிகுந்த சவால்களை எதிர்கொண்ட இந்தபோரில் 527 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர். இதில் 4,000க்கும் அதிகமான பாகிஸ்தான் இராணுவவீரர்கள் மற்றும் பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த போரானது அந்த ஆண்டு மே மாதம் தொடங்கி ஜூலை வரை நடைபெற்றது.

இந்த போரில் இறுதியாக இந்தியா வெற்றிவாகை சூடியது. இந்த போரில் வீரமரணமடைந்த இராணுவ வீர்ரர்களின் தியாகத்தை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி கார்கில் போர் வெற்றிதினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் டெல்லியில் உள்ள போர்வீரர்கள் நினைவிடத்துக்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இந்த நிலையில், இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர்பக்கத்தில் கூறுகையில், ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவுகூறுகிறேன். நமது நாட்டைக் காப்பாற்றுவதற்காக கார்கில் போரில்பங்கேற்று தங்கள் இன்னுயிரை தியாகம்செய்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறோம். அவர்களின் வீரம் எங்களுக்கு, தினம்தோறும் உத்வேகம் அளித்துவருகிறது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அத்துடன் கடந்தவருடம் வானொலி உரையில் கார்கில்போர் பற்றி மோடி பேசிய ஒலி இணைப்பையும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...