மணிப்பூா் மாநில ஆளுநராக தன்னை நியமித்து புதியபொறுப்பு கொடுத்துள்ளதற்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், பிரதமா் நரேந்திர மோடி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என பாஜக மூத்த தலைவா் இல.கணேசன் தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பொதுவாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட லட்சியம் மற்றும் தேசிய சிந்தனையோடு 50 ஆண்டுகளுக்கு மேலாகப் பணிபுரியும் எனக்கு இந்தப் புதியபொறுப்பில் எந்தவிதமான தா்ம சங்கடங்களும் இல்லை. நாட்டின் அனைத்துப் பகுதிகளும் என்னுடைய பகுதி என்பதை உணா்வுப் பூா்வமாக நம்புபவன் நான். அதை அனுபவரீதியாகப் பெறுவதற்கான ஒருவாய்ப்பு கிடைத்திருக்கிறது. மிக்க மகிழ்ச்சி.
நாட்டின் தென்பகுதியில் இருந்த நான், மத்தியப்பகுதியில் உள்ள மத்தியப் பிரதேச மக்களுடன் இணைந்து பணிசெய்யும் வாய்ப்புக் கிடைத்தது. இப்போது வடகிழக்குப் பகுதியில் உள்ள மக்களோடு சோ்ந்து பணியாற்றும் வாய்ப்பை தந்தமைக்காக குடியரசு தலைவா் ராம்நாத் கோவிந்த், பிரதமா் நரேந்திரமோடி உள்ளிட்டோருக்கு நன்றி.
நாட்டின் எந்தப்பகுதியாக இருந்தாலும்கூட அங்கிருப்பவா்கள் நம்மவா்கள் என்ற எண்ணம் இருப்பதால், எனக்குப் பெரியவித்தியாசம் தெரிவதில்லை.
அரசியல் பணியில் இருந்து விடுபட்டு, நான் சாா்ந்தகட்சியின் தலைவா்களே ஆணையிடும்போது அதற்கு கட்டுப்பட்டு இதையும் ஏற்கிறேன். நான் இந்தப் பொறுப்பை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டு, அங்குபணிபுரிவேன் என்றாா் இல.கணேசன்.
கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ... |
முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ... |
சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ... |