இன்னும் 3 மாதத்தில் திமுகவினர் தங்களை மாற்றிக் கொள்வார்கள்

இன்னும் 3 மாதத்தில் வேளாண்சட்டம், நீட்தேர்வு விஷயத்திலும் திமுகவினர் தங்களை மாற்றிக் கொள்வார்கள் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார். அப்போது, ’’பெட்ரோல் – டீசல், சமையல் எரிவாயுவிலை உயர்வுக்கு நிரந்தர தீர்வாக உள்நாட்டில் உற்பத்தியைபெருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். தமிழகத்தில் பாஜக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக பாஜக கட்சி அடிப்படையில் வளர்ந்து கொண்டிருக்கிறது. இளைஞர்கள் படை நம் பக்கம் திரும்பி இருக்கிறது. இதற்கு காரணம் நம் கட்சிக்காக முன்னோர்கள், மூத்தநிர்வாகிகள் பிரதிபலன் பாராமல் உழைத்ததுதான்.

திமுக 120 நாள் ஆட்சியில் சொன்னது எதையும் செய்யமுடியாத நிலையே நீடிக்கிறது. நீட்தேர்வை ரத்துசெய்ய முடியாது என்பது திமுகவிற்கு தெரியும். நீட் தேர்வு ஏழை மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். தமிழ் வழியில் படித்த பலர் நீட்தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். புதிய கல்விக் கொள்கை வேண்டும் என்று 51 இலட்சம் பேர் கையொப்பமிட்டுள்ளனா். திமுக நடத்தும் இரண்டு, மூன்று ஊடகங்களின் ஆதரவு பாஜக-வுக்கு இல்லை.

பெட்ரோல் விலை, கேஸ்விலை உயரும்போது மக்கள் பாதிக்கப்படுவார்கள். இந்த விலையை மிகவிரைவாக முறைப்படி கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்துவருகிறது. மிக வேகமாக இந்த விலை கட்டுக்குள் வரும். பெட்ரோல்-டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்த முறைப்படி என்ன செய்ய முடியும் என்பதை பாராளுமன்றத்தில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் கூறியுள்ளார். அதன்படி, நிரந்தர தீர்வாக உள்நாட்டில் அசாம், மும்பை உள்ளிட்ட பகுதிகளில் எரிவாயு உற்பத்தியை பெருக்கதேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும்’’என அவர் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மோடியை சந்தித்து வாழ்த்து பெற் ...

மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற இசைஞானி பிரதமர் நரேந்திரமோடியுடன் இசைஞானி இளையராஜா சந்திப்பு மேற்கொண்டார். இளையராஜாவின் ...

நாட்டின் ஆத்மாவை பிரதிபலித்த ம ...

நாட்டின் ஆத்மாவை பிரதிபலித்த மகா கும்பமேளா உத்தர பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில் நடைபெற்ற நாட்டின் ...

அமெரிக்க அதிபர்கள் யாருமே செய் ...

அமெரிக்க அதிபர்கள் யாருமே செய்யாத செயல் – பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தின் போது துப்பாக்கியால் சுடப்பட்ட டிரம்ப், தற்போது ...

வளர்ச்சியை நோக்கி இந்தியா – ஐ ...

வளர்ச்சியை  நோக்கி இந்தியா – ஐநா அறிக்கை நடப்பு நிதியாண்டின் 4ம் காலாண்டில் இந்தியா, சீனா ...

டாஸ்மாக் ஊழல் முற்றுகை போராட்ட ...

டாஸ்மாக் ஊழல் முற்றுகை போராட்டம் – பாஜக தலைவர் அண்ணாமலை கைது சென்னையில் டஸ்மாக் தலைமை அலுவலகத்தில், ரூ.1000 கோடி ...

பயங்கரவாதம்ம் பிரிவினைவாதம் ச ...

பயங்கரவாதம்ம் பிரிவினைவாதம் செயல்களுக்கு எதிராக போராடுவோம் – பிரதமர் மோடி 'பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாத சக்திகளுக்கு எதிராக போராட ...

மருத்துவ செய்திகள்

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.