திருச்சி மன்னார்புரம் பகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் தேசிய கல்விக்கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் 50000க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
விழாமேடையில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜகவின் கையெழுத்து இயக்கத்திற்கு மக்களிடையே அமோகவரவேற்பு கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
18 நாள்களில் 26 லட்சம்பேர் தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்துக் கையெழுத் திட்டுள்ளதாகப் பெருமிதம் தெரிவித்த அண்ணாமலை, 8-வது மண்டல மாநாடு முடிவடையும் போது 2 கோடியை நோக்கி கையெழுத்து இயக்கம்செல்லும் என உறுதிப்படக் கூறினார். தொடர்ந்துபேசிய அவர், அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தரமான கல்வி கிடைக்க புதிய கல்விக் கொள்கை வழிவகுக்கும் எனத் தெரிவித்தார்.
கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ... |
மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ... |