கள்ளச்சாராயம் கேட்பதற்குகூட நாதியில்லை

“முன் எப்போதும் இல்லாதளவுக்கு தமிழகத்தில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதைக் கேட்பதற்குகூட நாதியில்லை. யாருக்கும் கேட்பதற்குக்கூட தைரியம் இல்லை. அதையும் மீறி காவல்துறைக்கு தகவல்தெரிவித்தால், தகவல் கொடுத்தவர்களை கூலிப்படை வெட்டிக்கொலை செய்யும் அளவுக்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக்கொண்டிருக்கிறது.” என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சாடியுள்ளார்.

தமிழக பாஜகவின் மாநில செயற்குழு கூட்டம் சென்னை வானகரம் பகுதியில் உள்ள ஸ்ரீவாரி திருமணமண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தகூட்டத்தில், மத்திய அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், கட்சியின் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை மற்றும் கட்சியின் மூத்தநிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது: “தமிழகத்தின் அனைத்து இடங்களிலும்கூட, ஒருசாதாரண மனிதனின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பது போல, திமுகவின் அரசாங்கம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. தமிழகம் இதுபோல் வன்முறை இணைந்த மாநிலமாக இதற்குமுன் எப்போதும் பார்த்ததில்லை. கடந்த மூன்றாண்டுகளாக திமுக அரசின் பிடியிலே இப்படி நடந்துகொண்டிருக்கிறது,

இன்னொரு பக்கம் கள்ளச்சாராயம் என்பது ஆறுபோல் ஓடிக் கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் திருவெண்ணெய்நல்லூரில் ஒருவர் கள்ளச்சாராயத்துக்கு பலியானார். அதற்கு முன்பு திருப்பூர், கோவை, உடுமலைப் பேட்டையில் 5 பேர் கள்ளச் சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் வேறுவேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு முன்பாக, கள்ளக் குறிச்சியல் கள்ளச் சாராயம் குடித்து இது வரை 65 பேர் உயிரிழந்துள்ளனர். 23 பேர் முழுவதுமாக தங்களுடைய கண்பார்வையை இழந்துள்ளனர்.

கடந்த 2023 ஆம் ஆண்டு, மரக்காணம், விழுப்புரம், செங்கல்பட்டு பகுதியில் 22 பேர் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்துள்ளனர். முன்எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் கள்ளச் சாராயம் ஆறாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதைக்கேட்பதற்குக்கூட நாதியில்லை. யாருக்கும் கேட்பதற்குக்கூட தைரியம் இல்லை. அதையும்மீறி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தால், தகவல் கொடுத்தவர்களை கூலிப்படை வெட்டிக் கொலைசெய்யும் அளவுக்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது.

எனவே, தவறுகளைக் கேட்பதற்கு சாமானிய மனிதன் அஞ்சுகிறான். அரசிடம் கேள்வி கேட்பதற்கான சாமானிய மனிதனின் துணிவுகுறைந்து கொண்டிருக்கிறது. அரசை எதிர்த்து சாமானிய மனிதன் கேள்விகேட்டால், அவர்களுக்கு கைதுமட்டுமே பரிசாக கிடைக்கிறது. எனவே தான் பாஜகவின் குரல், இந்தநேரத்தில், இன்னும் கம்பீரமாக, வேகமாக, சாமானிய மனிதர்களுக்காக பேச வேண்டியிருக்கிறது. சாமானியர்களின் குரலை திமுக அரசு நசுக்கிக் கொண்டிருக்கும் போது, அடுத்த இரண்டு ஆண்டுகளில் தீய சக்தியின் ஆட்சி தூக்கி எறியப் படும்வரை, பாஜகவின் குரல் ஒரு சாமானிய மனிதனின்குரலாக ஒலிக்க வேண்டும்” என்று அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் எம்:ஜி:ஆர் – பிரதமர் மோடி புகழாரம் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி ...

சிங்கப்பூர் அதிபருடன் பிரதமர் ...

சிங்கப்பூர் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு இந்தியா வந்துள்ள சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னத்தை பிரதமர் ...

திறன் மேம்பாட்டில் இந்தியா இரண ...

திறன் மேம்பாட்டில் இந்தியா இரண்டாவது இடம் – பிரதமர் மோடி மகிழ்ச்சி செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் பசுமை தொழில்கள் ...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது ...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது சம்பள கமிஷன் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு 8 வது சம்பள கமிஷன் ...

திருக்குறளின் போதனைகள் உலகம் ம ...

திருக்குறளின் போதனைகள் உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன – கவர்னர் ரவி 'திருக்குறளின் போதனைகள் இப்போது உலகம் முழுதும் எதிரொலிக்கின்றன' என, ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குக ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது – பிரதமர் மோடி புகழாரம் திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது ...

மருத்துவ செய்திகள்

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...

அமுக்கிரா கிழங்கு

இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் ...

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...