மாற்றுத்திறனாளிகளை பள்ளியில் சேர்க்கும் உ.பி. ஆசிரியைக்கு பிரதமர் பாராட்டு

மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியரை தேடிகண்டுபிடித்து பள்ளியில் சேர்க்கும் உத்தரபிரதேச ஆசிரியையை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டி உள்ளார்.

பிரதமரின் மனதின்குரல் வானொலி உரை நேற்று முன்தினம் ஒலிபரப்பானது. அப்போது உத்தரபிரதேசத்தின் பரேலியை சேர்ந்த ஆசிரியைக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார்.

‘‘உத்தரபிரதேசத்தில் ‘ஓர் ஆசிரியர், ஓர் அழைப்பு’ என்ற உன்னத இயக்கத்தை பரேலியின் டபோரா கங்காபூர் பள்ளித்தலைமை ஆசிரியை தீப்மாலா பாண்டே தலைமையேற்று நடத்தி வருகிறார். இந்த இயக்கத்தில் 350-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியைகள் இணைந்துள்ளனர்.

இவர்கள் சேவையுள்ளத்தோடு கிராமந்தோறும் சென்று மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியரை தேடிஅலைகின்றனர். அவர்களை ஏதாவது ஓருபள்ளியில் சேர்த்து விடுகின்றனர். மாற்றுத் திறனாளி குழந்தைகளின் கல்விக்காக பாடுபடும் தீப்மாலாவுக்கும் அவருடன் இணைந்திருக்கும் ஆசிரியர்களுக்கும் மனம்திறந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று பிரதமர் கூறினார்.

இதுகுறித்து ஆசிரியை தீப்மாலா பாண்டே (38) கூறியதாவது:

கடந்த 2018-ம் ஆண்டில் அன்மோல் என்ற செவித்திறன் குறைந்த மாணவனை எங்கள்பள்ளியில் சேர்த்தேன். அந்த மாணவனின் கல்வி ஆர்வம் என்னை பிரம்மிக்கவைத்தது. அப்போதுமுதல் மாற்றுத் திறனாளி குழந்தைகளின் கல்விக்காக தன்னலமின்றி சேவையாற்றிவருகிறேன்.

கடந்த 4 ஆண்டுகளாக மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியரை கண்டறிந்து அவர்களை பள்ளி களில் சேர்த்து வருகிறேன். என்னுடைய சேவையை பார்த்து மாநிலம்முழுவதும் 350-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் என் னோடு இணைந்துள்ளனர். இதுவரை 600-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளை பள்ளிகளில் சேர்த்துள்ளோம்.

கரோனா ஊரடங்கின் போது எங்கள் இயக்கத்துக்கு ‘ஓர் ஆசிரியர், ஓர் அழைப்பு’ என்று பெயர் சூட்டினோம். என்னோடு இணைந்துள்ள ஆசிரியர்கள் மாதம் ஒருமுறை ஒன்றுகூடி மாற்றுத் திறனாளி குழந்தைகளின் கல்வி திட்டங்கள் குறித்து ஆலோசிக்கிறோம். அவர்களுக்காக ஆன்லைன் வகுப்புகளை நடத்துகிறோம்.கருத்தரங்குகள், சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்.

என்னையும் என்னோடு இணைந்துள்ள ஆசிரியர்களையும் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு நன்றியை உரித்தாக்குகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

விவசாயிகளுக்கு திமுக அளித்த வா ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் எங்கே போனது ? அண்ணாமலை கேள்வி வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்க ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்கை விடுத்தால் நீங்கள் இருக்க மாட்டிர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை ''இரும்புக்கரம் கொண்டு முருக பக்தர்கள் மீது கை வைத்தால், ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதற்கு முன் இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்படுவார்களோ ? அண்ணாமலை சென்னை அடுத்த கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வெளியே, ஆட்டோவில் ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி  ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி – அண்ணாமலை நமது குழந்தைகளுக்கான அடிப்படைப் பாதுகாப்பை உறுதி செய்வதில் தி.மு.க., ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் : அண்ணாமலை திட்டவட்டம் திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் என தமிழக பா.ஜ., ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாம ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாமலை விமர்சனம் தமிழகம் முழுவதும் பாலியல் வன்கொடுமை என்பது ஒரு பயங்கரமான ...

மருத்துவ செய்திகள்

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.