மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் பேச்சு – வருத்தம் தெரிவித்தார் துரைமுருகன்

மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தும் வகையில் பேசியதற்கு, அமைச்சர் துரைமுருகன் நிபந்தனையற்ற வருத்தத்தை தெரிவித்தார்.

அண்மையில், தி.மு.க., பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் துரைமுருகன், ”தமிழகத்தில் தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் தான் கட்சிகள். மற்றவை எல்லாம் கட்சிகள் இல்லை. அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும் ஒரே அணியில் சேரும். போன்றவர்களை சேர்த்துக் கொண்டு, தி.மு.க.,வை எதிர்க்கப் பார்க்கின்றனர். அவற்றை எல்லாம் சமாளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” என பேசியிருந்தார்.

இவ்வாறு பேசுகையில், மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தும் வகையிலான வார்த்தைகளை அவர் பயன்படுத்தினார். இதற்கு கடும் கண்டனம் வலுத்து வந்தது.

இந்நிலையில் இன்று (ஏப்ரல் 11) தன் பேச்சுக்கு அமைச்சர் துரை முருகன் நிபந்தனையற்ற வருத்தத்தை தெரிவித்தார்.

இது குறித்து துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கை: இயற்கையிலேயே உடலில் ஏற்பட்ட குறைபாடு உடையவர்களை அருவருக்கும் பெயர் கொண்டு, அவர்களை அழைத்து வந்ததை கருணாநிதி கருணை உள்ளத்தோடு ‘மாற்றுத் திறனாளிகள்’ என்று பெயரிட்டு அழைத்தார். அதையே நாங்களும் பின்பற்றி வருகிறோம்.

அப்படிப்பட்ட நானே, ஒரு பொதுக்கூட்டத்தில் பேச்சின் வேகத்தில் மாற்றுத் திறனாளிகளை பழைய பெயரையே கொண்டு உச்சரித்து விட்டேன். கட்சி தலைவர் (முதல்வர் ஸ்டாலின்) என் கவனத்திற்கு கொண்டு வந்தபோது, நான் அதிர்ச்சியும் – வருத்தமும் அடைந்தேன். கருணாநிதியால் வளர்க்கப்பட்ட நானே இந்த தவறை செய்தது மிகப்பெரிய தவறாகும்.

மாற்றுத் திறனாளிகள் உள்ளம் புண்பட்டிருக்கும். அதற்காக என் நிபந்தனையற்ற வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். முதல்வர் ஸ்டாலின் எந்த அளவுக்கு வருந்தியிருப்பார் என்பது எனக்கு தெரியும். அவருக்கும் என் வருத்தத்தை தெரிவித்து, இனி இத்தகைய நிகழ்வு நிகழாது என்று உறுதி அளிக்கிறேன். இவ்வாறு துரைமுருகன் கூறியுள்ளார்.

பெண்கள் குறித்து பொன்முடியின் அவதூறு பேச்சு காரணமாக, கட்சி பதவி பறிக்கப்பட்ட நிலையில், அண்மையில் மாற்றுத்திறனாளிகள் குறித்து பேசியதற்கு இன்று துரைமுருகன் வருத்தம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஈஷா மஹா சிவராத்திரி நம் பண்பாட் ...

ஈஷா மஹா சிவராத்திரி நம் பண்பாட்டின் மறுமலர்ச்சி; மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம் கோவை ஈஷாவில் மஹா சிவராத்திரி விழா விமரிசையாக நடைபெற்றது. ...

நாட்டின் பாதுகாப்புக்கு மிகவு ...

நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் ஆபத்தான நபராக, காங்கிரஸ் எம்பி ராகுல் உருவெடுத்துள்ளார்  மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் ஆபத்தான நபராக, காங்கிரஸ் எம்பி ...

பிரதமர் மோடியுடன் கூகுள் சிஇஓ ச ...

பிரதமர் மோடியுடன் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை சந்திப்பு பிரதமர் நரேந்திர மோடியை, கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி ...

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப ...

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல் செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) தொழில்​நுட்​பத்தை மக்​கள் நலனுக்​காக பயன்​படுத்த ...

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்த ...

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி டெல்​லி​யில் பிரம்​மாண்ட செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) உச்சி மாநாட்டை ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்புத் துறையில் வளர்ந்து வரும் தற்சார்பு திறன் வெளிப்படுத்தப்பட்டது: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெங்களூருவில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ...

மருத்துவ செய்திகள்

ஆண்மையை அதிகமாக்கும் வழிகள்

அரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை 50 கிராம், ...

நந்தியாவட்டையின் மருத்துவ குணம்

ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ...

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...