வாரணாசிக்கு ஓராண்டில் 10 கோடிக்கும் அதிகமானபக்தர்கள் வருகை

பிரதமர் மோடியின் தீவிரமுயற்சிகளால் அவரது சொந்ததொகுதியான வாரணாசியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒருபகுதியாக வாரணாசியின் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் வளாகம் ரூ.339 கோடியில் விரிவாக்கம்செய்யப்பட்டு கடந்த 2021-ம் ஆண்டில் திறக்கப்பட்டது. இந்தகோயிலை ஒட்டியுள்ள 40-க்கும் மேற்பட்டகோயில்கள் அழகுபடுத்தப் பட்டன. வாரணாசியின் கங்கைநதி படித்துறைகள் புனரமைக்கப்பட்டன. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. தற்போது கோயில்வளாகம் பிரம்மாண்டம் ஆக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து வாரணாசிக்கு வரும்பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துவருகிறது. இதை பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சியில் நேற்று முன்தினம் அவர் பேசியதாவது:

சிராவண மாதத்தில் 12 ஜோதிர் லிங்கங்களுக்கு பக்தர்கள் புனிதபயணம் மேற்கொள்கின்றனர். இதன் காரணமாக வாரணாசி, அயோத்தி, மதுரா, உஜ்ஜைன் உள்ளிட்ட புனிதத் தலங்களில் லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது.

குறிப்பாக வாரணாசிக்கு ஓராண்டில் 10 கோடிக்கும் அதிகமானபக்தர்கள் வருகை தருகின்றனர். இதன்மூலம் அந்த நகரின் பொருளாதாரம் மேம்பட்டு வருகிறது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த 2 பேர், சுவாமி விவேகானந்தரின் போதனை களால் ஈர்க்கப்பட்டு அண்மையில் அமர்நாத் புனிதயாத்திரை மேற்கொண்டனர். அனைத்து தரப்பினரையும் இந்தியா அரவணைக்கிறது. இது நமது நாட்டின் தனிச்சிறப்பு. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...