பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளையொட்டி காரைக்கால் மாவட்டம் நிரவியில் பாஜக ஓபிசி அணி சார்பில் நேற்றுநடைபெற்ற சிறப்புமருத்துவ முகாமில், பாஜக தேசிய பொதுச் செயலாளர் புரந்தேஸ்வரி, புதுச்சேரி மாநிலதலைவர் வி.சாமிநாதன், புதுச்சேரி உள்துறை அமைச்சர் ஏ.நமச்சிவாயம், குடிமைப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் ஏ.கே.சாய் ஜெ.சரவணன் குமார் ஆகியோர்பங்கேற்றனர்.
முன்னதாக, திருநள்ளாறு கடைத் தெருவில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
பின்னர், செய்தியாளர்களிடம் புரந்தேஸ்வரி கூறியது: புதுச்சேரியில் பாஜக வளர்ச்சி யடைந்துள்ளது. புதுச்சேரியில் அமைந்துள்ள பாஜககூட்டணி அரசின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். மத்தியஅரசின் திட்டங்கள் புதுச்சேரியில் முறையாக அமல்படுத்தப் படுகின்றன. சிறந்த நிர்வாக தலைவரான பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் இதுவரை யார்மீதும் ஊழல் குற்றச்சாட்டு இல்லை. நாட்டில் உள்ள ஏழைமக்கள் நலனுக்காக பிரதமர் பணியாற்றி வருகிறார் என்றார்.
தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ... |
குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ... |
அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ... |