யமுனை நதி சீர்கெடுவதற்கு கெஜ்ரிவால் தான் காரணம் – அமித்ஷா குற்றச்சாட்டு

“யமுனை நதி சீர்கெடுவதற்கு அரவிந்த் கெஜ்ரிவால் தான் காரணம்,” என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றஞ்சாட்டினார்.

ரோஹிணியில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து அவர் பேசியதாவது:

லண்டனில் உள்ள தேம்ஸ் நதியைப் போல யமுனையை சுத்தம் செய்வதாக ஆம் ஆத்மி அளித்த வாக்குறுதி என்ன ஆனது என்று மக்கள் கேட்கும் நிலையில், ஹரியானாவில் உள்ள பா.ஜ., அரசு ஆற்றில் விஷம் கலந்ததாக அரவிந்த் கெஜ்ரிவால் பொய்யாகக் குற்றஞ்சாட்டினார்.

ஹரியானா அரசுக்கு எதிரான கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டு, கீழ்த்தரமான அரசியல். ஊழல் காரணமாக ஆம் ஆத்மி அரசின் 10 ஆண்டுகால ஆட்சியில் யமுனையை சுத்தம் செய்வதாக கூறிய வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை.

தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பொய் சொல்வதை நிறுத்த வேண்டும் என்று கெஜ்ரிவாலிடம் சொல்ல வந்துள்ளேன்.

கெஜ்ரிவால், நீங்கள் யமுனை நதியை மாசுபடுத்தி, அதன் தண்ணீரை குடிக்க மக்களை கட்டாயப்படுத்தினீர்கள். மேலும் நதியை சுத்தம் செய்ய பயன்படுத்த வேண்டிய அனைத்து பணத்தையும் ஆம் ஆத்மி கட்சியின் ஊழலுக்கு கொடுத்தீர்கள்.

சட்டசபைத் தேர்தலில் தோல்வியை உணர்ந்த பிறகு, கெஜ்ரிவால் இதுபோன்ற கீழ்த்தரமான அரசியல் செய்கிறார். கெஜ்ரிவால், உங்களால் எதுவும் செய்ய முடியாவிட்டால், டில்லியை எவ்வாறு சிறப்பாக நிர்வகிக்க முடியும் என்பதை நாங்கள் காண்பிப்போம்.

ஆம் ஆத்மியின் 10 ஆண்டுகால ஆட்சியில் முழு டில்லியையும் அரவிந்த் கெஜ்ரிவால் குப்பைத் தொட்டியாக மாற்றினார்.

இவ்வாறு பேசிய அமித்ஷா, ஆம் ஆத்மி அரசின் தோல்விகளையும் ஊழல்களையும் பட்டியலிட்டு பா.ஜ., வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழ் மொழியை வியாபாரமாக பயன்பட� ...

தமிழ் மொழியை வியாபாரமாக பயன்படுத்தும் திமுக தமிழ் மொழியை வியாபாரமாகவும், அரசியல் செய்யவும் மட்டுமே, தி.மு.க., ...

அமித்ஷாவுக்கு பாஜக தலைவர் நன்ற� ...

அமித்ஷாவுக்கு பாஜக தலைவர் நன்றி தெரிவித்துள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்று முன்தினம் பா.ஜ., ...

140 கோடி மக்களின் நம்பிக்கை – பி� ...

140 கோடி மக்களின் நம்பிக்கை – பிரதமர் மோடி பெருமிதம் 'மஹா கும்பமேளா நிகழ்ச்சி நிறைவடைந்தது. 140 கோடி இந்தியர்கள் ...

ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி

ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி இரண்டாம் உலகப்போரின் 80ம் ஆண்டு வெற்றி விழா கொண்டாட்டத்தில் ...

தொகுதி மறுசீரமைப்பு பற்றி ஸ்டா ...

தொகுதி மறுசீரமைப்பு பற்றி  ஸ்டாலின் சொல்வது பொய் – அமித்ஷா குற்றச்சாட்டு 'லோக்சபா தொகுதி மறுசீரமைப்பு பற்றி தமிழக முதல்வர் ஸ்டாலின் ...

2026-ல் திமுகவை வீட்டுக்கு அனுப்ப� ...

2026-ல் திமுகவை வீட்டுக்கு அனுப்புவது உறுதி – அண்ணாமலை 'தமிழகத்தில் நீங்கள் என்ன குட்டிக்கரணம் போட்டாலும், 2026ல் நீங்க ...

மருத்துவ செய்திகள்

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...

நந்தியாவட்டையின் மருத்துவ குணம்

ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ...

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...